Published on 15/03/2018 | Edited on 15/03/2018
இது தமிழ்நாட்டிற்கு மிகமுக்கியமான ஒருநாள். இன்று தமிழ்நாடு அரசு தனது பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. வழக்கம்போல நடந்தது இரண்டு விஷயங்கள். ஒன்று, துணை முதல்வர் பன்னீர்செல்வம் அம்மா புகழ் பாடியது. இரண்டு, செயல்தலைவர் தலைமையில் தி.மு.க. வெளிநடப்பு செய்தது. இதில் ஜெயலலிதாவிற்கென தனி பட்ஜெட் வேறு ஒதுக்கப்பட்டுள்ளது.
- கால்நடை பராமரிப்பு துறைக்கு 1,227.69 கோடி
- மாநில பேரிடர் நிவாரணம் 786 கோடி
- வறுமை ஒழிப்புக்கு 920 கோடி
- 26 மாவட்டங்களில் உள்ள கிராமப்புற புத்தாக்க திட்டத்திற்கு 920 கோடி
- தீயணைப்பு, மீட்புப் பணி 347 கோடி
- காவல்துறைக்கு 7877 கோடி
- பள்ளிக்கல்வி துறைக்கு 27,205.88 கோடி
- உயர் கல்வித்துறைக்கு 4,620 கோடி
- பழங்குடியினர் நலனுக்கு 333.82 கோடி
- அணைகள் புனரமைப்பு திட்டத்திற்கு 166.08 கோடி
- அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்காக 1,750 கோடி
- பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு 972.86 கோடி
- ஆதிதிராவிடர் நலத்துறை 3,207.04 கோடி
- மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்திற்கு 250 கோடி
- நெடுஞ்சாலைத்துறைக்கு 11,073.66 கோடி
- வேளாண்துறைக்கு 8916.25 கோடி
- மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு 545 கோடி
- மீன்வளத்துறைக்கு 1,016 கோடி
- உணவுப்பொருள் மானியத்திற்கு 6,000 கோடி
- தகவல் தொழில்நுட்ப துறைக்கு 158.11 கோடி
- போக்குவரத்து துறைக்கு 2717.34 கோடி
- இளைஞர் நலன், விளையாட்டுத்துறைக்கு 191 கோடி
- ஓய்வூதிய திட்டத்திற்கு 25,362 கோடி
- மானியம் மற்றும் உதவித்தொகைக்கு 75,723 கோடி
- பேரிடர் நிவாரணத்திற்கு 786 கோடி
- சுகாதாரத்துறைக்கு 11,638.44 கோடி
- தமிழ் வளர்ச்சித்துறைக்கு 52.56 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- 3 இலட்சம் ஏழை குடும்பத்திற்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும்.
- 41,977 கோடியாக இருந்த நிதி பற்றாக்குறை, இந்தாண்டு 23,176 கோடியாக குறைந்துள்ளது.
- ஜி.எஸ்.டி. மூலம் ஒன்பது சதவீதம் நிதி உயர்ந்துள்ளதாகவும் அறிவிப்பு.