Skip to main content

சசிகலா, எடப்பாடி, ப.சிதம்பரம் - முட்டை ஊழலில் மூவர் கூட்டணி? ஐ.டி ரெய்டில் சிக்கிய ஷாக் தகவல்கள்

Published on 14/07/2018 | Edited on 14/07/2018

ருமான வரித்துறை சரியாகத்தான் குறி வைக்கிறது. அதன் ரெய்டுக்குப் பிறகான நடவடிக்கைகள் மத்திய மோடி அரசின் விருப்பு-வெறுப்புகளை பொறுத்தே அமைகின்றன.

சசிகலா குடும்பத்தினர், ப.சி. குடும்பத்தினர், கிறிஸ்டி புட் நிறுவனம் என ரெய்டுகளை நடத்திய வருமானவரித்துறையினர் ஒன்றுக்கொன்று தொடர்புடைய மோசடிகள் சிலவற்றையும் கண்டறிந்தனர். அதில் ஒன்று, சென்னைக்கருகே கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் நெம்மேலியில் 86 ஏக்கர் நிலம் கிறிஸ்டி நிறுவனத்தின் கைகளுக்கு மாறியிருக்கிறது.
 

pc-sasi-eps


தமிழகம் முழுவதுமுள்ள சத்துணவு மையங்களுக்கு முட்டை சப்ளை செய்யும் நாமக்கல் நிறுவனமான 'கிறிஸ்டி'யின் கோக்குமாக்குகள் பலவற்றை நக்கீரன் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது.

1991-96 ஜெ. ஆட்சியில் மதுசூதனன் அமைச்சராக இருந்தபோது, சத்துணவுத் திட்டத்திற்கு சத்துமாவு சப்ளை செய்ய கிறிஸ்டி புட் நிறுவனம் முயற்சிக்கிறது. அப்போது பூந்தமல்லியில் இயங்கி வந்த கிறிஸ்டி நிறுவனத்தின் உரிமையாளர் குமாரசாமி காஞ்சிபுரம் மாவட்டம் முழுக்க சத்துணவு மையங்களுக்கு சத்துணவு சப்ளை செய்ய ஆர்டரை மதுசூதனனின் உறவினர் ஜெ.பி. மூலம் பெறுகிறார். (இதை அப்போதே நக்கீரன் பதிவு செய்திருக்கிறது). பின்னர் ஜெ. ஆட்சியில், சமூகநலத்துறை அமைச்சராக வளர்மதி இருந்தபோதும் கிறிஸ்டியின் முட்டை சப்ளை தமிழகம் முழுவதும் தொடர்ந்தது. எடப்பாடி ஆட்சி அமைந்ததும் பழைய உறவுகளின் மூலம் கிறிஸ்டி நிறுவனம் தொடர்ந்து முட்டை சப்ளை செய்து வருகிறது. அழுகிய முட்டைகளை சப்ளை செய்து, கமிஷன் மூலம் அதிகாரத்தில் உள்ளவர்களை சரிக்கட்டியதையும் நக்கீரன் அம்பலப்படுத்தியது.

 

 


ஐ.ஏ.எஸ். அதிகாரியான சதீஷ்குமார் திருச்சியில் பணிபுரிகிறார். இவரது மனைவியும் ஹிமாச்சல பிரதேச ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சுதாதேவி அயல் பணி நியமனமாக தமிழகத்திற்கு வரவழைக்கப்பட்டு நுகர்பொருள் வாணிப கழக மேலாளராக நியமிக்கப்படுகிறார். உணவு அமைச்சர் காமராஜ், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, ஐ.ஏ.எஸ். அதிகாரி சுதாதேவி ஆகியோர் தமிழகம் முழுவதும் சத்துணவு முட்டை விநியோகத்தை மேற்கொள்கின்றனர்.

 

egg-corruption



இந்தியா முழுவதும் தனது வியாபாரத்தை பெருக்க நினைத்த கிறிஸ்டி நிறுவனத்தை கர்நாடக அரசு தரமற்ற சத்துமாவு சப்ளை செய்ததாக தடை செய்துள்ளது. அந்தத் தடையை விலக்கி கர்நாடகாவிலும் தமிழ்நாடு போல புகுந்து விளையாட ப.சி. குடும்பத்தை அணுகுகிறது கிறிஸ்டி நிறுவனம். கர்நாடகாவில் வேறு பெயரில் இயங்கி சித்தராமையா அரசில் கால் பதிக்கிறது. கிறிஸ்டியின் கர்நாடக ஆபரேஷன்களுக்கு ப.சி.யின் பணம் முதலீடாகிறது என வருமானவரித்துறையின் புலனாய்வுப் பிரிவு கண்டுபிடிக்கிறது.

 

 


இந்த அறிக்கையைப் படித்த பிரதமர் மோடி "கிறிஸ்டியின் நடவடிக்கைகளில் சசிகலா குடும்பத்திற்கு சம்பந்தமில்லையா?' என கேள்வி எழுப்புகிறார். சசிகலா குடும்பத்திற்கும் எடப்பாடி பழனிச்சாமி மூலமாகவே கிறிஸ்டிக்கும் தொடர்பு இருந்தது என ஒரு புதிய கண்டுபிடிப்பை வெளிப்படுத்துகிறது வருமானவரித்துறை. இப்படி ப.சி., சசிகலா என அரசியலின் இரண்டு எதிரிகளுடன் தொடர்பு கொண்டிருந்த கிறிஸ்டி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுங்கள் என ஆணையிடுகிறார் மோடி. நெம்மேலியில் உள்ள இடம் ப.சி., ஜெ.பி., கிறிஸ்டி நிறுவனம் என கை மாறியிருப்பதை அறிந்து, ஜெ.பி.க்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடக்க, அவரது வழக்கறிஞரான நளினி சிதம்பரம் லைனில் வந்துள்ளார். ஜெ.பி.யிடம் செல்போன் பாஸ்வேர்ட் என்ன என அதிகாரிகள் கேட்டபோது, "வக்கீலிடமே கேளுங்கள்' என்றாராம். அதேபோல் ப.சி.யிடம் ஏன் நிலம் வாங்கினீர்கள் என கிறிஸ்டி நிறுவன உரிமையாளர் குமாரசாமியிடம் கேட்ட கேள்விக்கான எழுத்துப்பூர்வமான பதிலை நளினி சிதம்பரத்தின் ஆலோசனைப்படி சுதாதேவி ஐ.ஏ.எஸ். தனது கம்ப்யூட்டரில் தட்டச்சு செய்து தந்தார் என்கிறார்கள் அதிர்ச்சி விலகாத வருமானவரித்துறையினர்.

minister-kamaraj-saroja
ஜெ.பி.யின் அலுவலகத்தில் நடந்த சோதனையின்போது, ஆவணங்கள் சிக்காமல் ஆரம்பத்தில் தவித்த வருமானவரித்துறையினர், பின்னர் அலுவலக ஊழியர்களின் உள்ளாடைகளை சோதனையிட்ட போது அதில் ஸ்பெஷல் பாக்கெட் தைக்கப்பட்டு, அதற்குள் பென் டிரைவ்கள் இருந்தது கண்டறியப்பட்டது. அத்துடன் மேலும் பல ஆவணங்கள், டாலர்களை கைப்பற்றிய வருமானவரித்துறையினர், ஜெ.பி. அங்கே வந்தபோது, "நீங்கள் போகலாம், எங்களுக்கு உங்களது கணினியிலிருந்து ஆவணங்கள் கிடைத்துவிட்டன. 36 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு அமலாக்கத்துறை உங்களை விசாரிக்கும்'' என்றவர்கள், "அவரது அலுவலகத்தில் இருந்த கேமராக்களில் மு.க.ஸ்டாலினின் மருமகன் வந்து சென்ற பதிவுகளை பற்றி சில கேள்விகள் கேட்டோம்'' என்கின்றனர்.

ரெய்டின்போது சுதாதேவி ஐ.ஏ.எஸ். படுஉஷாராக இருந்துள்ளார் என்கிற அதிகாரிகள், "அவரது அனைத்து பணப்பரிவர்த்தனைகளும் வளர்மதி என்கிற சகோதரி மூலமாகவே செய்திருந்தார். அவரது வீட்டில் 2 கிலோ தங்க நகைகளை மட்டுமே எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது. அவரது அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டரில் ப.சி.யின் நிலத்தை ஏன் வாங்கினேன் என கிறிஸ்டி நிறுவனர் குமாரசாமி வருமானவரித்துறைக்கு அளித்த பதில் டைப் செய்யப்பட்டிருந்தது. மற்ற விவரங்கள் அனைத்தையும் தெளிவாகத் திட்டமிட்டு அழித்திருந்தார். அவரது செல்போன் மற்றும் கம்ப்யூட்டரில் மனு உருவாக்க சாஃப்ட்வேரை போட்டு மீட்டெடுத்து, அவரை மடக்கினோம்'' என்கிறார்கள்.

 

 


"கிறிஸ்டி புட் நிறுவனத்தில் 4 நாட்கள் ரெய்டு நடத்தினோம். அவர்களது கம்ப்யூட்டர்களை நெருங்க முடியவில்லை. அதன் பென் டிரைவ்களை ஒளித்து வைத்திருந்தார் அதன் மேலாளர் கார்த்திகேயன். அவரை லத்தி துணையுடன் வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்தபோது, அவர் அலுவலகத்திலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். வருமானவரித்துறையின் கடுமையை கண்ட மற்ற ஊழியர்கள் அலறிப்போய் நிறுவனத்தின் கழிவறைகளிலும் ஜன்னலின் உட்புறமும் கயிறு கட்டி ஒளித்து வைத்த சாவிகளை காட்டினர்.

அதில் ஒரு சாவி கிறிஸ்டி புட்ஸ் அலுவலகத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள வீட்டுக்கு உரியது. அந்த வீட்டின் கிணற்றில் ஆவணங்கள் பாலிதீன் பைகளில் கட்டப்பட்டு மறைக்கப்பட்டிருந்தன. ஜன்னலில் கட்டப்பட்ட கயிறில் பென் டிரைவ்கள் சிக்கின. தற்கொலைக்கு முயன்ற கார்த்திகேயன் வீட்டிலிருந்த கம்ப்யூட்டரில் ஏராளமான ஆவணங்கள் மற்றும் 8 கிலோ தங்கம் கிடைத்தது. மற்ற இடங்களில் 17 கோடி ரூபாய் பணம் மட்டுமே கிடைத்தது'' என்கின்றனர்.

 

 


"ரெய்டில் கிடைத்த ஆவணங்களில் மிக முக்கியமானது எடப்பாடி பழனிச்சாமி, சசிகலாவுக்கு சொந்தமான 300 கோடி ரூபாயை கிறிஸ்டி புட் மூலமாக வெள்ளைப் பணமாக மாற்றிய ஆவணம். அதேபோல் கிறிஸ்டி புட் நிறுவனத்தில் ப.சி. முதலீடு செய்த ஆவணங்கள், அதனுடன் ஐ.ஏ.எஸ். அதிகாரி சுதாதேவி மூலமாக தமிழக சத்துணவு திட்டத்தில் முட்டை வினியோகத்தில் கோடி கோடியாக கமிஷன் பார்த்த ஆவணங்கள், இவற்றுடன் ஜெ.பி., ப.சி. மூலமாக கர்நாடகத்தில் கிறிஸ்டி செய்த வியாபாரம் தொடர்பான ஆவணங்கள் எனப் பட்டியலிடுகிறார்கள் அதிகாரிகள்.

jpரெய்டு பற்றி அக்னி நிறுவன தலைவர் ஜெ.பி.யிடம் கருத்து கேட்டபோது அவர் எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில், ப.சிதம்பரத்தின் மனைவியான வழக்கறிஞர் நளினி சிதம்பரத்தை தொடர்பு கொண்டோம். "உங்களது வீட்டில் நடந்த வருமானவரி சோதனையின் போது நீங்கள் அக்னி நிறுவன தலைவர் ஜெ.பி.யிடம் நிலத்தை விற்றதாகவும் அதை கிறிஸ்டி நிறுவனம் வாங்கியதாகவும் வருமான வரித்துறை சொல்கிறதே?'' என கேட்டதற்கு, "அது தவறான தகவல்'' என்றார். "நீங்கள் ஜெ.பி.க்கு சொந்தமான அக்னி நிறுவனத்திற்காக வழக்கறிஞராக பணிபுரிகிறீர்களா?'' என கேட்டதற்கு "அதுவும் தவறான தகவல். நான் இது குறித்தெல்லாம் பத்திரிகையாளர்களிடம் எதுவும் பேசுவதில்லை'' என்றார். ரெய்டில் தொடர்புடையவர்களின் விளக்கங்களை வெளியிட நக்கீரன் தயாராக உள்ளது.

அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு வருமானவரித்துறை ரெடியாகியுள்ளது. இந்த டீமுடன் தொடர்புடைய முன்னாள் உள்துறை செயலாளர் சையது முனீர் ஹோதா, ஐ.ஏ.எஸ். அதிகாரி சுதாதேவி ஆகியோரிடமும் விசாரணை பற்றியும் அத்துடன் வெளிநாட்டில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் பற்றியும் விசாரிக்கப்படும் என்கிறார்கள் வருமானவரித்துறை அதிகாரிகள்.

 

 

 

Next Story

பாஜக தேர்தல் அறிக்கை; ப.சிதம்பரம் சரமாரி கேள்வி!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 BJP Election Manifesto; P. Chidambaram barrage of questions

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கும் வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி வரை நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. பின்பு பதிவான வாக்குகள் ஜூன் 4 எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்படவுள்ளது. ஆட்சியைத் தக்க வைக்கும் வகையில் பாஜகவும், இழந்த ஆட்சியை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இத்தகைய சூழலில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி நேற்று (14.04.2024) வெளியிட்டார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு உருவாக்கிய இந்த தேர்தல் அறிக்கை டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வெளியிட்டப்பட்டது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் பாஜக தேர்தல் அறிக்கை குறித்துப் பேசுகையில், “எல்லா ஊர்களுக்கும் குழாய் மூலம் தண்ணீரே சென்று சேராத நிலையில், குழாய் மூலம் எரிவாயு எப்படிக் கொண்டு செல்ல முடியும். அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்வதாக பாஜக அளித்துள்ள வாக்குறுதி மிகப்பெரிய வேடிக்கையான செயல் ஆகும். பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளில் 4 கோடி வீடுகளை கட்டிக்கொடுத்துவிட்டதாக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது பொய்க் கணக்கு ஆகும். அதாவது 4 கோடி வீடுகளை கட்டி இருந்தால் 52 ஆயிரம் வீடுகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டி இருக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் பாஜக அரசு கட்டிக்கொடுத்த 52 ஆயிரம் வீடுகளைக் காட்ட முடியுமா?. 

 BJP Election Manifesto; P. Chidambaram barrage of questions

நாடாளுமன்றத்தில் 33 சதவித மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றி இருந்தாலும் அந்த சட்டம் இப்போதைக்கு அமலுக்கு வராது. பெண்களுக்கான 33 சதவித இட ஒதுக்கீட்டை வேண்டுமென்றே பாஜக ஒத்திப் போட்டுள்ளது. அனைத்து ஊர்களுக்கும் புல்லட் ரயில் இயக்கப்படும் என்ற பாஜக வாக்குறுதி வேடிக்கையானது. ஒரு புல்லட் ரயிலுக்கு ரூ. 1.1 லட்சம் கோடி செலவு செய்யத் தயாராக உள்ள பாஜக அரசு, போதிய ரயில் விபத்து தடுப்புக் கருவிகளைப் பொருத்தாதது ஏன்?.

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை என்பது ஏற்கெனவே உள்ள ஒன்றுதான். பழைய பல்லவிகளைப் பாடுவது புதிய சிந்தனை அல்ல. பாஜக தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் இல்லை. நாட்டில் 5% பேர் ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள் என்பதை ஏற்க முடியாது. பாஜக தேர்தல் அறிக்கையில் மக்களை ஏமாற்றும் தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன” எனத் தெரிவித்தார். 

Next Story

மக்களவைத் தேர்தல்; பா.ஜ.க.வுக்கு ப.சிதம்பரம் சவால்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
P. Chidambaram challenge to BJP on Lok Sabha elections

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகள் கொண்ட அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் அறிக்கையை வெளியிட்டனர். 5 தலைப்புகளில் 25 வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அளித்தது. 

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகள் குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக, ப.சிதம்பரம் இன்று (06-04-24) காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இந்த தேர்தலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். சமூக நீதி, அரசியல் நீதி, பொருளாதார நீதி ஆகியவற்றுக்கு தேர்தல் அறிக்கையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மாநில உரிமைகளை மதிக்கும் ஒன்றிய அரசு அமைப்பது குறித்து காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. மாநில உரிமைகள் குறித்து காங்கிரஸ் குறிப்பிட்டுள்ள 12 அம்சங்களில் ஏதாவது ஒன்றை ஏற்க பா.ஜ.க தயாரா?. 

தி.மு.க, காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகள் ஒத்துப்போவது இயற்கையான ஒன்றுதான். முரண்பட்ட கூட்டணியை காங்கிரஸ், தி.மு.க அமைக்கவில்லை. ஒன்றிய அரசு விதிக்கும் செஸ் வரியை குறைப்போம் என காங்கிரஸ் உறுதி அளித்துள்ளது. செஸ் வரி குறைக்கப்படும் போது பெட்ரோல், டீசல் விலை தானாகவே குறையும்” என்று கூறினார்.