“இதோ பாருடா… ‘இந்து ராமுக்கு வெள்ளித்தட்டில் விருந்து கொடுத்த நக்கீரன்கோபால்’னு வாட்ஸ்ஆப்புல மெசேஜ் அனுப்புறாங்க. இந்து ராம்தானே தன்னோட வீட்டில் நக்கீரன் கோபாலுக்கு விருந்து கொடுத்தாரு. அதை நக்கீரன் வெப்சைட்டிலும் 25.10.2018 தேதியே ஓப்பனா பதிவு செய்திருக்காங்களே.. ஸ்க்ரீன் ஷாட் கூட இருக்கே…
https://nakkheeran.in/special-articles/special-article/hindu-nram-and-nakkheeran-gopal-meeting
இதையெல்லாம் கவனிக்காம, நக்கீரன் வெளியிட்ட படத்தையே எடுத்துப் போட்டு உல்டாவா எழுதியிருக்கிற நாதாரிகளே.. நீங்க திருந்தவே மாட்டீங்களா?” என சீறியிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.
என்ன விவகாரம்?
ஆளுநர் மாளிகையின் புகாரின் பெயரில் ஆசிரியர் நக்கீரன் கோபால் அக்டோபர் 9ந் தேதி கைதுசெய்யப்பட்டபோது, மூத்தப்பத்திரிகையாளரான ’தி இந்து’ குழுமத்தின் தலைவர் என். ராம் நீதிமன்றத்தில் வைத்த கருத்துகள் மிகுந்த கவனம் பெற்று, நக்கீரன் கோபாலை நீதிபதி ரிமாண்ட் செய்யாமல் விடுவிக்க காரணமாக அமைந்தது.
இந்த நிலையில், ‘இந்து’ ராம் இல்லத்தில் கடந்த அக்டோபர்-11 வியாழக்கிழமையன்று அவரை சந்தித்து மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தார் நக்கீரன் கோபால் குடும்பத்துடன் சந்தித்தார். அப்போது காலை உணவுடன் கருத்து சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிராக, சமீபகாலமாக வளர்ந்து வரும் அச்சுறுத்தல்கள் குறித்தும் அவற்றை ஒன்றாக நின்று எதிர்கொள்வது குறித்தும் உரையாடினர். இச்செய்தி, ‘பத்திரிகை சுதந்திர போராளிகள் இருவரின் சந்திப்பு’ என்கிற தலைப்பில் நக்கீரன் இணையதளத்தில் அப்போதே புகைப்படங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. இதைத்தான் உல்டாவாக்கி, இந்து ராமுக்கு வெள்ளித்தட்டில் நக்கீரன் கோபால் விருந்து என்று சிலர் வதந்தியை பரப்பி வருகிறார்கள். எளிதில் தொடர்பு கொள்ளக்கூடியவரான நக்கீரன் கோபாலைக் கேட்டிருந்தாலே, யார் வீட்டு வெள்ளித்தட்டு என்பதைக் கேட்டு, அவர்களே நன்றாக ‘விளக்கி’யும் வைத்திருக்கலாம் என்கிறார்கள் நெட்டிசன்கள்.