Skip to main content

அரசாங்க குளறுபடியும் ரேசன் அட்டை காமெடிகளும்!

Published on 19/09/2017 | Edited on 19/09/2017
அரசாங்க குளறுபடியும் ரேசன் அட்டை காமெடிகளும்! 

இதோ வருது அதோ வருதுன்னு பல ஆண்டுகள் இழுத்தடித்த பிறகு சமீபத்தில்தான் குடும்ப அட்டைகளுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வினியோகிக்கப்பட்டன.

ஆனால், ஸ்மார்ட் கார்டு கையில் கிடைத்த நாளில் இருந்து ரேசன் கடைகளில்தான் அது இல்லை இது இல்லை என்ற புலம் ஒலிக்கத் தொடங்கியது.

அதுதான் அப்படி என்றால், குடும்பத் தலைவரின் அனுமதி இல்லாமலேயே குடும்பத்தலைவியின் படத்தை அட்டையில் போட்டு பல ஆண்களின் வெறுப்பை சம்பாதித்தார்கள்.

இப்படி வழங்கப்பட்ட அட்டைகளில் மனைவியை பிரிந்து வாழும் கணவர்களுக்கு சொந்தமானவையும் இருந்தன. மனைவியை இழந்த கணவர்களுக்குச் சொந்தமானவையும் இருந்தன.



சரி போகட்டும் என்று எல்லாவற்றையும் சகித்துக் கொண்டாலும், பெயர்களும் காமெடியாக பதிவாகியிருந்தன. ஆங்கிலத்தை தமிழாக்கும்போது ஏற்பட்ட குளறுபடிகள் என்று அதையும் சகித்துக் கொள்ளலாம்.

ஆனால், குடும்பத்தலைவியின் படம் இருக்க வேண்டிய இடத்தில் சினிமா நடிகை காஜல் அகர்வால், செருப்பு, நாய், பிள்ளையார், தேசியக் கொடி என்று இடம்பெற்றதைத்தான் சகித்துக் கொள்ள முடியவில்லை.

காஜல் அகர்வாலைக்கூட சகித்துக் கொள்ளலாம். ஆனால் மனிதர்களுக்கான கார்டில் செருப்பு, நாய், பிள்ளையார், தேசியக்கொடியெல்லாம் இடம்பெறுகிறது என்றால் எப்படி எடுத்துக் கொள்வது?

வேண்டுமென்றே நடக்கிறதா? கடுப்பில் யாரும் இதைச்  செய்தார்களா என்பதுதான் புரியவில்லை.

ஹும். அரசாங்கமே தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அமைச்சர்களும் அதிகாரிகளும் அவுங்க பிரச்சனையைப் பார்ப்பார்களா, மக்கள் பிரச்சனையை பார்ப்பார்களா?

எப்போத்தான் முடிவு ஏற்படும்னு பார்க்கலாம்.

-ஆதனூர் சோழன் 

சார்ந்த செய்திகள்