Skip to main content

"மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் செய்ய முடிவு" - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் 

Published on 28/08/2022 | Edited on 28/08/2022

 

"Decided to picket in front of central government offices" - Mutharasan

 

விலைவாசி உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் நடத்தப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். 

 

சென்னை பாலன் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் "அத்தியாவசியப் பொருட்கள் மட்டும் அல்ல, அனைத்து பொருட்களின் விலைகளும் பன்மடங்கு உயர்ந்து இருக்கிறது. உயர்ந்து கொண்டே இருக்கிறது. விலைவாசி உயர்வுக்கு எதிராக இந்த மாதம் 30ம் தேதி தமிழ்நாடு முழுவதும் 150க்கும் மேற்பட்ட மையங்களில் மத்திய அரசு அலுவலகங்களின் முன்னால் மறியல் செய்ய முடிவு செய்து அதற்கான முழு தயாரிப்பை அந்தந்த மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்