Skip to main content

கின்னஸ் சாதனைக்கு வறுமையே தடையா இருக்கு கிராஃபைட் லைட் குச்சியில் 1330 திருக்குறளை எழுதிய இளைஞன் பேட்டி:

Published on 03/07/2018 | Edited on 04/07/2018

பென்சிலில் எழுதப்படும் கிராஃபைட் லைட் குச்சிகளை கொண்டு 1330 திருக்குறளை எழுதி அதனை கொண்டு திருவள்ளுவர் உறுவத்தை உறுவாக்கி அசத்தியிருக்கிறார் இளைஞர் அரவிந்தன். ஏற்கனவே ஜாக்பீஸ் துண்டுகளை கொண்டு அ என்கிற எழுத்தை  செதுக்கி திருவள்ளுவர் உறுவத்தை உருவாக்கி சாதனையை நோக்கி நகர்ந்து வரும் அந்த இளைஞனுக்கு வறுமையின் பிடி அவனது வளர்ச்சியை கட்டிப் போட்டிருக்கிறது.

 

 

 

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்துள்ளது சட்ட நாதபுரம். அங்கு கவரிங் நகை செய்யும் கூலித் தொழிலாளியின் இரண்டாவது மகன் அரவிந்தன். மயிலாடுதுறை அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. படித்த அரவிந்தனை குடும்பத்தின் வறுமை மேல் படிப்பு படிக்க விடவில்லை. அரவிந்தனுக்கு சிறு வயதில் இருந்தே ஓவியம் வரையும் பழக்கம் இருந்துள்ளது. அதன் மீது அளவில்லாத ஆர்வமும் கொண்டு பல ஓவியங்களை வரைந்து அசத்தியிருக்கிறார்.
 

இந்த நிலையில் பென்சிலில் எழுதப்படும் கிராஃபைட் லைட் 1330க் கொண்டு 1330 திருக்குறளை ஊசிமுனைக் கொண்டு எழுதி அந்த கிராப் பைட் லைட்டுகளை கொண்டு திருவள்ளுவர் உறுவத்தை அமைத்துள்ளார். 

 

 

 

அரவிந்தன் தனது சாதனை குறித்து நம்மிடம் பேசினார், " சின்ன வயசுல இருந்தே ஒவியத்தின் மீது ஆசை. அதில் பெரிய அளவில் சாதிக்கணும் என பல முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன். ஆனால் வறுமை எனக்கு முன்னால் வேளியாக நிற்கிறது. பென்சிலை கொண்டு 700க்கும் அதிகமான ஓவியங்களை வரைந்துள்ளேன். அதே போல பெயின்டிங்கில் 700க்கும் அதிகமான ஓவியம் வரைந்துள்ளேன். 13. மி.மீட்டர் மரக்கட்டைகளை கொன்டு திருவள்ளுவர், சிவன், விநாயகர் உள்ளிட்ட உருவங்களை செய்துள்ளேன். தமிழ் மீது கொண்ட பற்றின் காரணத்தால் ஜாக்பீஸ் துண்டுகளில் 1330 அ எழுத்துக்களை செதுக்கி அதை கொண்டு திருவள்ளுவர் உருவத்தை  உருவாக்கியுள்ளேன். 
 

ஏற்கனவே போஸ்ட் கார்டில் 2500 கண்கள் வரைந்திருப்பதே கின்னஸ் சாதனையாக இருந்தது. அதை உடைக்கும் வகையில் 3,111 கண்களை வரைந்து கின்னஸ் சாதனைக்கு அனுப்பியுள்ளேன். இன்னும் பதில் வரவில்லை. அதன் தொடர்ச்சியாகத்தான் பென்சிலில் உள்ளே உள்ள  கிராஃபைட் லைட்களில் 1330 திருக்குறளை எழுதி வள்ளுவர் உறுவத்தை உருவாக்கினேன். 4 செ.மீ நீளம், 3. மின் தடிமன் கொண்ட பென்சிலின் உள்ளே இருக்கும் லைட்களில் 1 திருக்குறள் வீதம் 1330 லைட்களில் எழுதியுள்ளேன். 1 மணி நேரத்திற்கு 6 திருக்குறள் வீதம் ஒரு நாளைக்கி 5 மணி நேரம் எழுதினேன். அதை எழுதி உருவமாக்க சரியா 2 ம் தேதியோடு ஐம்பது நாட்கள் ஆனது." என்றவர்.
 

மேலும்,  குடும்பத்தின் வறுமை அடுத்தக் கட்டத்திற்கு போக முடியாத நிலையாகிடுச்சி, கிடைக்கிற வேலைகளை செய்கிறேன், சிமென்டால் சிலை வடித்து கொடுக்கிறேன், கல்யாணம், பிறந்த நாள் வாழ்த்துகளுக்கு சோப்பு மெழுகுவர்த்தி, கார்டுகள் மூலம் வரைந்து கொடுத்து கிடைக்கிற காசில் பிழைக்கிறோம், அரசாங்கம் எனக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்தால் நிச்சயம் சாதனை புரிவேன்" என்கிறார்.