
வேலூர் சைதாப்பேட்டை ராமர் பஜனை கோவில் பகுதியைச் சேர்ந்தவர் முகுந்தன். இவருக்கு சொந்தமான இரண்டு மாடி கொண்ட வீட்டைக் காலணி தைக்கவும், அதனை வைக்கும் குடோனாகவும் பயன்படுத்தி வருகிறார். நேற்று இரவு மின்வெட்டு ஏற்பட்ட சூழலில் அனைவரும் புறப்பட்டுச் சென்றுள்ளனர். இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து வந்த வேலூர் தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை அணைத்தனர். பிளாஸ்டிக் காலணிகள் என்பதால் தீ மல மலவென பரவி இரண்டு மாடியும் எரிந்து நாசமாகியுள்ளது. இது குறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்றிரவு எப்.எம் ரேடியோவை ஆஃப் செய்யாமல் சென்றதாகவும். மீண்டும் மின்சாரம் வந்த நிலையில் தொடர்ந்து இயங்கிய எப்.எம் ரேடியோவால் மின் கசிவு ஏற்பட்டு இந்த தீ விபத்து ஏற்பட்டதாக நிறுவனங்கள் தரப்பில் தீயணைப்புத் துறையினரிடம் தெரிவித்துள்ளனர். அதற்கான சாத்தியம் இருக்கிறதா? என காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரும்பாலான தீ விபத்துக்கள் இயற்கையாக நடந்தாலும், சில தீ விபத்துக்கள் செயற்கையாக நடைபெறுகின்றன. நிறுவனங்கள் விபத்து காப்பீடுகளை பெறுவதற்காகவும், நஷ்டத்தைக் காட்டுவதற்காக இப்படி தீ விபத்துக்கள் உருவாக்கப்படுகின்றன என கூறுகின்றனர். காவல்துறையினர் ஒரு தரப்பினர். எஃப் எம் ரேடியோ பாடிக்கொண்டு இருந்தது எப்எம் ரேடியோ வெடித்ததாக தகவல் இல்லை அதிலிருந்து மின் கசிவு ஏற்பட்டதாக கூறுகின்றனர் அது சாத்தியமா என விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.