Skip to main content

சபரிமலை வழக்கு - இளம்பெண்களும் வழிபட தடையில்லை!

Published on 14/11/2019 | Edited on 14/11/2019
s

 

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உத்தரவுக்கு எதிரான வழக்கில் இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பை வழங்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு கூடுதல் நீதிபதிகள் கொண்ட விரிவான அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டது. சபரிமலை வழக்கு 5 நீதிபதிகள் அமர்வில் இருந்து 7 நிதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உத்தரவுக்கு தடை விதிக்கப்படவில்லை.


கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10வயது 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு அனுமதியில்லை என்ற வழக்கம் காலம்காலமாக இருந்து வருகிறது.   இதை எதிர்த்து அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக்கோரி கடந்த 2016ம் ஆண்டில் பல்வேறு அமைப்பினர் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.   அப்போதையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள்கொண்ட அமர்வு, இந்த வழக்கை விசாரித்து கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அளித்த தீர்ப்பில், ‘’கோயில்களில்  பெண்களுக்கு அனுமதி மறுப்பது இந்து மதத்தில் பின்பற்றப்படும் வழக்கம் கிடையாது.   ஆகவே, அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதி அளிக்கப்படுகிறது’’ என்று கூறப்பட்டது.   

 

 இந்த தீர்ப்பை எதிர்த்து 65 பேர் மறு ஆய்வு மனு போட்டனர்.  இந்த 65 மனுக்களையும் நீதிபதி நாரிமன் இன்று தள்ளுபடி செய்தார். அதே நேரத்தில், சபரிமலை வழக்கு 5 நீதிபதிகள் அமர்வில் இருந்து 7 நிதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உத்தரவுக்கு தடை விதிக்கப்படவில்லை என்பதால், சபரிமலையில் இளம்பெண்களும் வழிபட தடையில்லை.  

 

சார்ந்த செய்திகள்