Skip to main content

இறந்தபின் மைக்கேல் ஜாக்சன் சம்பாதித்த தொகை எவ்வளவு தெரியுமா?

Published on 29/08/2018 | Edited on 29/08/2018
michael jackson


 

பாப் இசை உலகின் பிதாமகன், பாப் ரசிகர்களின் கடவுள் மைக்கேல் ஜாக்சன். உலகின் எல்லா மூலையிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்த அவர் ஜூன் 25, 2009ல் இறந்தார். மைக்கேல் ஜாக்சன் உயிருடன் இருக்கும்போதே பல உச்சங்களைத் தொட்டவர். அவர் இறந்த பின்பும் கூட அது இன்றும் தொடர்கிறது, அவரது பாடல் சி.டி.க்கள் விற்பனை, பாடல்கள் காப்புரிமை, ஏலம் போன்றவற்றால்.

 

 

 

மைக்கேல் ஜாக்சன் இறந்தது 2009ஆம் ஆண்டில். அந்த ஆண்டில் மட்டும் அவரது வருமானம் 9 கோடி டாலர்கள். 2010ல் அது 27.5 கோடி டாலர்கள். 2011ஆம் ஆண்டில் அவரது ஆண்டு வருமானம் 17 கோடி டாலர்களாகும். 2012, 2013, 2014ம் ஆண்டுகளில் முறையே 14.5 கோடி, 16 கோடி, 14 கோடி டாலர்களாகும். 2015ம் ஆண்டில் 11.5 கோடி டாலர்களாகும். இப்போது வரையில் அவரது ஆண்டு வருமானத்திலேயே 2016ம் ஆண்டின் வருமானம்தான் அதிகம். அந்த ஆண்டில் மட்டும் அவரது ஆண்டு வருமானம் 82.5 கோடி டாலர்கள். கடந்த ஆண்டில் (2017) அவரது ஆண்டு வருமானம் 7.5 கோடி டாலர்கள்.

 

 

 

இப்படியாக அவர் உயிருடன் இருக்கும்போது மட்டுமல்ல, இறந்த பின்னும் பெரும் பணக்காரராகவே இருக்கிறார். உதவி செய்யும் மனப்பான்மை கொண்ட ஜாக்சன். தான் வாழும் காலத்திலேயே நிறைய தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கியுள்ளார். இதற்காக அவரின் பெயர் கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது. இறந்த பின்னும் அப்படியே வாழ்கிறார் மைக்கேல் ஜாக்சன்...

 

 

 

 

 

Next Story

உருவாகிறது மைக்கேல் ஜாக்சன் பயோ-பிக்? - வெளியான மாஸ் தகவல்

Published on 21/01/2023 | Edited on 21/01/2023

 

Michael Jackson bio-pic in the making reports

 

பாப் இசை உலகின் பிதாமகன், பாப் ரசிகர்களின் கடவுள் என்று போற்றப்பட்டவர் மைக்கேல் ஜாக்சன். உலகின் எல்லா மூலையிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் இவர் மண்ணை விட்டு மறைந்தாலும் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். நடனத்தை பற்றி படம் எடுத்தால் இவரது குறிப்பு இல்லாமல் எடுக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு புகழ் உச்சியில் இருந்தார். அந்த வகையில் பொங்கலுக்கு அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் கூட அவரது ரெஃபரன்ஸ் இருந்தது. அதற்கு தமிழ்நாட்டில் வரவேற்பு இருந்தது. 

 

இப்படி மைக்கேல் ஜாக்சன், மற்ற படங்களில் ரெஃபரன்ஸ் ஆகவும் குறியீடுகளாகவும் வந்த நிலையில் அவரது வாழ்க்கை வரலாற்றை யாரும் படமாக்கவில்லை என்ற கேள்வி சினிமா ரசிகர்கள் மத்தியில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. அதற்கு விடை தரும் வகையில் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.  மைக்கேல் ஜாக்சன் பயோ-பிக், ஹாலிவுட்டில் 'மைக்கேல்' என்ற தலைப்பில் உருவாக்குவதாகவும் அதற்கான முயற்சிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 

 

இப்படத்தில் மைக்கேல் ஜாக்சன் கதாபாத்திரத்தில் யார் நடிக்கவுள்ளார் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. இப்படம் ஜான் லோகன் எழுத்தில் கிரஹாம் கிங் தயாரிப்பில் அன்டோயின் ஃபுகுவா இயக்கத்தில் இந்த ஆண்டு இறுதியில் படத்தின் பணிகள் தொடங்கவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அடுத்தடுத்து அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

 

Next Story

தனது நிழலைப் பார்த்து பயிற்சி பெற்ற டிக் டாக் டான்ஸர்!  

Published on 24/01/2020 | Edited on 24/01/2020

நான் ஆடுவதை பார்க்கவும் தவறுகளை திருத்திக் கொள்ளவும் வீட்டில் ஒரு கண்ணாடிகூட இல்லை. எனது நிழலின் அசைவுகளைப் பார்த்தே டான்ஸை திருத்திக் கொண்டேன் என்கிறார் யுவராஜ் சிங்.

டிக் டாக் ஆப்பை பயன்படுத்தி டான்ஸ் வீடியோக்கள் வெளியிட்டவர் ஜோத்பூரை சேர்ந்த யுவராஜ்.

 

Tic Tok Dancer trained to look after his shadow!


“ஆரம்பத்தில் எனது டிக் டாக் வீடியோக்களை மிகச் சிலரே பார்த்தார்கள். நான் எதைப்பற்றியும் கவலைப்படாமல் டான்ஸ் பயிற்சிக்காகவே வீடியோக்களை பதிவிட்டேன். அப்போதெல்லாம் வீட்டில் நான் பயிற்சி பெறவோ, எனது நடனத்தை பார்க்கவோ கண்ணாடிகூட இல்லை. எனது நிழலைத்தான் பார்த்து ஆடுவேன்.

யு டியூப்பில் நடனங்களைப் பார்த்தே நான் ஆடப்பழகினேன். எனது வீடியோக்கள் வைரலான பிறகு ஒரு நாள் டெல்லியைச் சேர்ந்த நடனக்குழுவின் இயக்குநர் ஹர்பீத் என்னை அழைத்து தனது குழுவில் சேர்த்துக் கொண்டார்” என்று பழைய நினைவுகளைக் கூறுகிறார் யுவராஜ்.

 

Tic Tok Dancer trained to look after his shadow!

 

இந்திய அளவில் இன்னொரு மைக்கேல் ஜாக்‌ஸனாக உருவெடுத்திருக்கும் யுவராஜ் சிங், ஹ்ரித்திக் ரோஷனை தனக்கு மிகவும் பிடிக்கும். மைக்கேல் ஜாக்ஸனைப் போல ஆட வேண்டும் என்பதே தனது விருப்பம் என்கிறார். இவர் ஆடும்போது காற்றில் மிதப்பதைப் போல இவருடைய கால்கள் ஒரு மாயஜாலத்தை செய்கிறது. இதை ரசித்த ஹ்ரித்திக் ரோஷன், யுவராஜின் நடனக் கிளிப்புகளில் சிலவற்றை தொகுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றினார். அதைத் தொடர்ந்து அவர் மீண்டும் இந்திய அளவில் வைரலாகி இருக்கிறார்.