Skip to main content

’’அன்றாடம்காச்சி என்ன செய்வான்? அவனுக்கு நஷ்ட ஈடு கொடுங்க..’’- மன்சூர் அலிகான் 

Published on 23/03/2020 | Edited on 23/03/2020
m

 

கொரோனாவை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் ஊரடங்கை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டபடி மக்களும் அதன்படியே நடந்தனர்.   மேலும், பல மாவட்டங்கள் வரும் 31ம் தேதி முடக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து, பொதுமக்கள் வீட்டிலேயே இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

 

இந்த நடவடிக்கைகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து நடிகர் மன்சூர் அலிகான், மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

 

அவர், ’’வல்லரசுன்னு சொல்லுறாங்க. டிஜிட்டல் இந்தியான்னு சொல்லுறாங்க. சைனாவுல பரவி எவ்வளவு நாளாச்சு.  ஏர்போட்டிலேயே இந்த வைரசை தடுத்து நிறுத்தியிருக்கலாமே. உள்ளே ஏன் விடுறீங்க?


கொரோனா கொரோனான்னு சொல்லி வருமுன் காப்போம் நடவடிக்கை எடுக்குறாங்க.  அன்றாடம் காச்சி என்ன செய்வான்? அவனுக்கு நீங்க நஷ்ட ஈடு கொடுக்கணும். இன்னைக்கு உழைச்சாத்தான் அவனுக்கு காசு. பிரதமர் சொல்லிட்டாரு எல்லாரும் வீட்டுல  உட்கார்ந்துக்கோங்கன்னு.   


கை கொடுத்தா கொரோனா வருதுன்னு சொல்றீங்க.  தொட்டா தீட்டுங்குற நிலைமையை கொண்டு வந்துட்டீங்க.   கட்டுப்புடிச்சு ஆரத்தழுவி உட்கார வைப்பதுதான் நம்ம பண்பாடு.   கை கொடுத்தாலே கொரோனா வருதுன்னு சொன்னா....எச்சிலை தொட்டு தொட்டு ரூபா நோட்டை எண்ணுறோமே.. பணத்தை எரிச்சுடுறோமா என்ன? இல்லை பணத்தை கழுவி எடுக்கிறோமா? அப்படி பார்த்தா வீட்டுக்கு வீடு கொரோனா பரவி இன்னைக்கு கோடிக்கணக்கான பேர் செத்திருக்கணுமா இல்லையா?  ஏன் பீதியை கிளப்புறீங்க..? சிஏஏ, என்பிஆர், என்.ஆர்.சிக்கு எதிரான போராட்டங்களை தடுப்பதற்காகவே கொரோனாவை வைத்து அரசியல் செய்யுறீங்க.

 

சளி பிடிச்சா காய்ச்சல் வரும் என்பது எல்லோருக்கும் தெரியும்.  கொரோனாவுக்கான உண்மையான அறிகுறி என்ன? அதைச்சொல்லுங்க. அதுக்கு இன்னும் மருந்தும் கண்டுபிடிக்கல.

ஏழை, எளிய மக்கள் 15 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வராம இருக்கனும்னு சொன்னா அவன் என்ன பண்ணுவான்? அவனுக்கு 15 லட்சம் கொடுக்க வேண்டாம்.  ஒவ்வொரு வீட்டுக்கும் ஆயிரம் இரண்டாயிரமாவது கொடுங்க.   

 

ஏற்கனவே வேலை வாய்ப்பு இல்ல. பல பேர் திருட ஆரம்பிச்சுட்டான்.  பேங்குல பணம் போட்டா அதையும் திருடிட்டு போயிடுறீங்க.   பிழைக்க வழி இல்லேன்னா அவன் என்ன செய்வான்?’’என்று கேள்வி எழுப்பியுள்ளார்.