குமரி அ.தி.மு.க. மேற்கு மா.செ.வாக ஜான் தங்கம் இருக்கிறார். கடையாலுமூடு பகுதியைச் சேர்ந்த இவருக்கு மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். சமீபத்தில் இவர் தன்னுடைய வீட்டு படுக்கையறையில் ஒருவருடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக, முகம் சுளிக்க வைத்துள்ளது. இவரோடு வீடியோவில் இருக்கும் நபர், கட்சியின் கிளை நிர்வாகி என்று கூறப்படுவதால், அப்பகுதி அ.தி.மு.க.வினர் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கடையாலுமூடு பகுதி அ.தி.மு.க.வினர் கூறுகையில், “ஆரம்பத்தில் ஜனதா, ஜனதா தளம், த.மா.கா. எனச் சுற்றியபின் கடைசியில் அ.தி.மு.க.வில் இணைந்தவர் ஜான் தங்கம். தளவாய் சுந்தரத்தின் தயவில் ஜெயலலிதா காலத்தில் மா.செ. ஆனார். அதன்பிறகு 2014-ல் கன்னியாகுமரி பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றார். ஜெ. மறைவுக்கு பிறகு எடப்பாடியின் தீவிர ஆதரவாளராக இருந்துவரும் ஜான் தங்கம், 2021-ல் பத்மநாபபுரம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப்போனார். குமரி மாவட்டத்தில் தளவாய் சுந்தரம் உட்பட பலர் அணி மாறிச் சென்ற போதும் இவர் எடப்பாடியோடுதான் இருந்தார். அந்த விசுவாசத்துக்காக தொடர்ந்து மா.செ.வாக எடப்பாடி வைத்திருக்கிறார்.
இந்நிலையில் வெளியான ஜான் தங்கத்தின் ஆபாச வீடியோ குறித்து பேசுறதுக்கே எங்களுக்கு 'நா' கூசுது. ஒரு கட்சிகாரன்கிட்டயா இப்படி தப்பா நடக்கணும்? கட்சியில் கிளை நிர்வாகியாக இருக்கும் அவர், ஜான் தங்கத்தின் தீவிர ஆதரவாளராக இருப்பவர். அரசியலில் பெரிய இடத்திலிருப்பவர்கள் பெண்கள் தொடர்பான சர்ச்சைகளில் சிக்குவதுண்டு. ஆனால் ஜான் தங்கத்தின் இந்த சர்ச்சையைப் பார்க்கையில், கட்சியில் ஆண்களுக்கே பாதுகாப்பில்லை என்பதையே காட்டுகிறது. இப்படி கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்திய இவர்மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இந்நிலையில், அந்த வீடியோ 3 மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு எடுக்கப்பட்டது என்றும், ஜான் தங்கத்தின் பதவியைக் குறிவைத்த எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகி ஒருவரும், ஒ.செ. ஒருவரும் காழ்ப்புணர்ச்சியில் இந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள். சென்னையில் அ.தி.மு.க. மா.செ.க்கள் கூட்டம் நடந்தபோது எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகியை தளவாய் சுந்தரமும், ஜான் தங்கமும் எடப்பாடியை சந்திக்கவிடாமல் மோசமாகப் பேசியதால் ஆத்திரத்தில் அவ்வீடியோவை சமூக வலைத்தளத்தில் விட்டதோடு, தலைமைக்கும் அனுப்பிட்டாங்களாம்.
ஜான் தங்கம் தரப்பினரோ, “அவருக்கு கால் இடுக்கு பகுதியில் புண் காயம் இருப்பதால் அதில் வழக்கமாக மருந்து போடும் போது, மருந்து போடும் நபரை யாரோ தூண்டிவிட்டு வீடியோ எடுத்து தவறுதலாக சித்தரித்து விட்டனர். அதை கட்சித் தலைமைக்கும் கூறிவிட்டோம்” என்கிறார்கள்.