கடந்த ஞாயிற்றுக்கிழமை வெங்கையா நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட அமித்ஷா, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை சந்தித்தார்.
அப்போது அவர், வேலூர் தேர்தலில் அதிமுக வாக்கு வங்கி எங்கே போனது. உங்கள் விருப்பப்படியே பாஜகவினர் இங்கு வேலை செய்யவில்லை. ஒட்டுமொத்த அமைச்சர்கள் வேலை செய்தும் அதிமுக வாக்கு எங்கே போனது?. கடந்த 2014 தேர்தலில் 3,20,000 வாக்குகள் வாங்கிய ஏ.சி.சண்முகத்தை, செல்வாக்கு உள்ள மனிதரை உங்களிடம் ஒப்படைத்தோம். ஏன் வெற்றிபெற வைக்கவில்லை?. 8141 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஏன் தோற்றார்? என்று புள்ளிவிவரத்தோடு கேள்வி எழுப்பியுள்ளார்.
உங்களுக்கு தேவையானவற்றையெல்லாம் செய்து கொடுத்தும் ஏன் தோல்வி?. உங்களால் பழியைத்தான் பாஜக சுமந்துகொண்டிருக்கிறது. நீங்கள் செய்யும் ஊழல்கள், நீங்கள் அடிக்கும் கமிஷன்கள் உள்ளிட்ட எல்லா விவரங்களும் எங்களுக்கு நொடிக்கு நொடி தகவல் வருகிறது. நாங்கள் நடவடிக்கை எடுத்தால் என்ன ஆகும் என்று நினைத்து பாருங்கள். இந்த மாதிரி வாக்கு வங்கி வைச்சிருந்தீங்கன்னா, சட்டமன்ற பொதுத்தேர்தலை எப்படி சந்திப்பது?
முதல் அமைச்சர் சீட்டில் நீங்கள் உட்கார்ந்திருப்பதால் நீங்கள் ஜெயலலிதா கிடையாது. ஜெயலலிதா மாதிரி நினைக்காதீங்க. தப்புக் கணக்கு போடாதீங்க. இப்போது உள்ள உங்களது அமைச்சர்கள் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் தோல்வியை சந்திப்பார்கள். எட்டு ஆண்டுகளாக நீங்கள் செய்யும் பணிகள் அந்த மாதிரி இருக்கிறது. உளவுத்துறை இதைத்தான் சொல்லுகிறது. ஆகையால் நாங்கள் சொல்வது மாதிரி நடந்துகொள்ளுங்கள் இல்லையென்றால் நாங்கள் கைவிட்டுவிடுவோம். அதிமுக வாக்கு வங்கி காணாமல் போகும் என்று எச்சரித்துள்ளார்.
அப்போது, வேலூரில் அதிமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால், காஷ்மீர் விவகாரத்தினால் அதிமுகவுக்கான வாக்குகள் குறைந்துவிட்டது என விளக்கமளித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த விளக்கத்தை அமீத்ஷா ஏற்கவில்லையாம்.