மக்கள் உரிமைகளுக்காக மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக விமர்சனம் செய்யும் எல்லோரையும் தேசவிரோதிகள் என்று தேசப்பாதுகாப்பு சட்டப்படி கைதுசெய்யும் போக்கு பாஜக ஆட்சியில்தான் தொடங்கியது. அது இன்றும் பத்திரிகை உரிமைகள் மீதும் பாய்ந்திருக்கிறது.
காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல் சம்பவங்களில் பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதி கோரி பெங்களூருவில் கருத்தரங்கம் நடத்திய ஆம்னெஸ்டி சர்வதேச அமைப்பின் இந்தியக் கிளை மீது, 124-ஏ சட்டப் பிரிவின் கீழ் பெங்களூரு போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்தார்கள். அப்போதே, தேசத் துரோகச் சட்டத்தின் அராஜகத் தன்மையையும், அதைப் பயன்படுத்தி நடத்தப்படும் துன்புறுத்தல்களையும் குறித்து சர்வதேச அளவில் வினா எழுந்தது.
மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து அவருடைய நடவடிக்கைகளையோ, அவர் எடுக்கும் முடிவுகளையோ விமர்சனம் செய்கிறவர்களை கைது செய்யும் போக்கு தொடங்கியது. சமீபத்தில்கூட முக்கிய சமூக ஆர்வலர்களும், அறிவுஜீவிகளுமான கொன்சால்வேஸ், சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லாகா, வரவரராவ், அருண் ஃபெரைரா ஆகிய ஐந்துபேரை புனே போலீஸார் கைது செய்தனர். சமூகநீதிக்காகவும், தனிமனித உரிமைகளுக்காகவும், தலித்துகளுக்கு ஆதரவாகவும் செயல்பட்ட அவர்களை மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் என்றும், மோடியை கொல்ல சதித்திட்டம் தீட்டியவர்கள் என்றும் கூறி கைது செய்ததை நீதிமன்றங்களே கண்டித்தன.
இப்படிப்பட்ட நிலையில்தான், நக்கீரன் ஆசிரியர் மீது ஆளுனர் பணியில் குறுக்கிட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டார். ஆனால், நீதித்துறையையும் காவல்துறையையும் மிகக் கேவலமாக விமர்சித்த எச்.ராஜா ஆளுனரைச் சந்திக்க முடிகிறது. அவருக்கு ஆளுனர் மாளிகையில் விருந்து வைத்து உபசாரம் நடக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில்தான், நக்கீரன் ஆசிரியர் மீது தேசத்துரோக வழக்கு பாய்ந்திருப்பதாக கூறப்பட்டு, பின்னர் அது இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 124 ஆக மாற்றப்ப்டடு, ஆளுநர் பணியில் குறுக்கிட்டதற்காக கைது என்று அறிவித்தார்கள். நீதித்துறையையும் காவல்துறையையும் மிகக் கேவலமாக விமர்சித்த எச்.ராஜா ஆளுனரைச் சந்திக்க முடிகிறது. அவருக்கு ஆளுனர் மாளிகையில் விருந்து வைத்து உபசாரம் நடக்கிறது.
ஆனால், ஆளுனர் தொடர்பான ஒரு வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்குறித்தும், அவருக்கு ஜாமீன் மறுக்கப்படுவது குறித்தும் செய்தி வெளியி்ட்டால் ஆளுநர் பணியில் குறுக்கிடுவதாகக் கூறி ஐபிசி124 ஆவது பிரிவின்கீழ் நக்கீரன் ஆசிரியர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். பத்திரிகையாளர்களும் வைகோவுடன் காவல்நிலையத்தின் முன் தர்ணாவில் ஈடுபடுகிறார்கள். வைகோவையே கைது செய்கிறார்கள். வழக்கறிஞராகக்கூட நக்கீரன் ஆசிரியரை சந்திக்க வைகோவுக்கு அனுமதி கொடுக்கவில்லை. ஒரு அறிவிக்கப்படாத நெருக்கடிநிலையை ஆளுநர் வழியாக தமிழகத்தில் அமல்படுத்த பாஜக அரசு முயற்சிக்கிறது என்று அரசியல் தலைவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலின், சிபிஐ மாநிலச்செயலாளர் முத்தரசன், சிபிஎம் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்துக் கட்சித்தலைவர்களும் கொந்தளிக்கிறார்கள்.
தேசவிரோத வழக்கில் பாஜக அரசும் எடுபிடி அரசும் நடவடிக்கை எடுத்தால், அவர்கள்தான் உண்மையான தேசபக்தர்கள் என்று வைகோ கூறியிருப்பதை இந்த இடத்தில் நாம் கவனிக்க வேண்டும். தங்களை தேசபக்தர்கள் என்று காட்டிக்கொண்டே இந்த தேசத்தின் ஒற்றுமைக்கும், தனிமனித உரிமைகளுக்கும் வேட்டு வைக்கிற நடவடிக்கைகள் மோடி அரசாங்கத்தில் தொடர்கதையாகி இருக்கிறது.