அஞ்சல்துறை ஆண்டாண்டு காலமாக மக்கள் சேவை துறையாக இருந்து வந்தது. கிராமங்களுக்கு தகவல்களை கொண்டுபோய் சேர்த்தது. தகவல்தொடர்பு நவீனமாகிவிட்டாலும் கூட இப்போதும் தபால், மணியாடர், பார்சல், விரைவு தபால், அதிவுரைவு தபால் என பணிகள் நடப்பதால் மக்கள் பயனடைகிறார்கள். இது மட்டுமா? அஞ்சலகம் மூலம் டெலிபோன் பில், தேர்வு கட்டணம் தொகை சேமிப்பு பணம், அயல்நாடுகளில் இருந்து பண பரிமாற்றம் என ஏகப்பட்ட சேவைகளை செய்து வருகிறது.
அடுத்து வங்கிகள் போல வாடிக்கையாளர்கள் சேமிக்கும் பணத்தை எடுக்க ஏடிஏம் கார்டு கொடுக்க உள்ளனர். இதன் மூலம் தங்கள் பணத்தை எங்கு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். இப்படி ஏகப்பட்ட பணிகளை செயல்படுத்திவரும் அஞ்சல்துறைக்கு போதுமான பணியாளர்களை நியமிக்கவில்லை. உதாரணமாக விருத்தாசலம் அஞ்சலக கோட்டத்தில், திட்டக்குடி, உளுந்தூர்பேட்டை, பெண்ணாடம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் என இரண்டு மாவட்டங்கள் கலந்துள்ள 80க்கும் மேற்ப்பட்ட அஞ்சலங்கள் இயங்கி வருகின்றன. திட்டக்குடி தாலுக்காவில் உள்ள அஞ்சலகத்தின் மூலம் செவ்வேறு, இடைச் செருவாய், கீழ்ச் செருவாய், கீரணர், பெருமுளை, சிறுமுளை, கோடங்குடி உட்பட பல்வேறு கிராமங்களில் உள்ள கிளை அஞ்சலங்களுக்கு வெளியூர்களில் இருந்து வரும் தபால் கட்டுகளை பிரித்து அனுப்ப வேண்டும். உள்ளூர் தபால் கட்டுகளை சேர்த்து பல ஊர் அனுப்ப வேண்டும். மேற்படி பணிகளோடு அஞ்சகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
திட்டக்குடி மாவட்ட எல்லையில் உள்ளதால் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த, அகரம், சீகூர், அத்தியூர், வயலூர், வயலப்பாடி, கிரணூர், துங்கபுரம், கோவில்பாளையும், தேனூர், அங்கனூர், காலிங்கயராயநல்லூர் மற்றும் திட்டக்குடியை சுற்றியுள்ள 10க்கும் மேற்ப்பட்ட கிராமங்களும் இங்குதான் வந்து தங்கள் பணியை செய்ய சொல்கிறார்கள். இவ்வளவு வேலைகளையும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பிறகு 1.30 மணி முதல் 3 மணி வரையும் சேவை நேரம் என்பதால் எல்லா பணிகளையும் முடிக்க முடியாது. இங்கே ஒரு அஞ்சல் அதிகாரியும், இரண்டு உதவியாளர்கள் என மூன்று பேர் பணியாற்றினர். தற்போது இரண்டு பேர் மட்டுமே உள்ளனர். இதிலே ஒருவர் விடுமுறை எடுத்தால் ஒரே ஒரு ஆள்தான். இத்தனையும் செய்ய வேண்டும். இதனால் இங்கே சேவை பணிக்காக வரும் வாடிக்கையாளர்கள் இங்கு பணிகள் காலதாமதம் ஆவதாலும், இன்று முடியாது நாளை வா என திருப்பி அனுப்புவதாலும் அஞ்சலக ஊழியர்களிடம் வாடிக்கையாளர்கள் சண்டைக்கு போகிறார்கள். இது தினசரி காட்சியாக உள்ளது.
ஏன் கால தாமதம் என்று கேட்டால் ஆள் பற்றாக்குறை என்கிறார்கள். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அஞ்சல்துறையில் ஏன் பணிவரன்முறைகளை கடைப்பிடிக்கவில்லை என்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு அலுவலக ஊழியரிடம் கோட்டோம். ஏற்கனவே ஓய்வு பெற்று காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவில்லை. இன்னும் சில மாதங்களில் சுமார் 80க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஓய்வு பெற உள்ளனர். இதனால் பலர் செய்த வேலையை ஒருவரே செய்ய வேண்டி வரும்.
அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் பணிகளை மட்டும் மேலும் மேலும் திணிக்கிறார்கள். இதனால் திணறிப்போன நான், எனது சம்பளத்தில் மாதம் 4,000 ரூபாய் கொடுத்து ஒரு படித்த இளைஞனை எனக்கு உதவியாக வைத்து பணிகளை முடிக்கிறேன். என்ன செய்வது வேலையைவிட்டால் சாப்பாட்டுக்கு வழி இல்லையே என்கிறார் வேதனையும், விரகத்தியுமாக. ஆகா, ஓகோ இந்தியா ஒளிர்கிறது என மோடியும் அவரது அரசும், மோடிமஸ்தான் வித்தை காட்டுகிறது. மோடியோ நாடு நாடாக போய் வித்தை காட்டி வருகிறார். இந்திய மக்களை பற்றிய கவலையே இல்லாமல்...