அயோத்தி தீர்ப்பு தொட்பாக பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ள நிலையில் இயக்குநர் அமீர் அதுகுறித்து தன்னுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு,
அயோத்தி தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு அந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது. அதில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த நீதிபதியும் இருந்தார். இந்த அமர்வில் அனைவரும் ஒரே மாதிரியான தீர்ப்பினை வழங்கியுள்ளார்கள். இதனை பலர் வரவேற்றுள்ளார்கள். சிலர் விமர்சனமும் செய்துள்ளார்கள். இதனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
நீதிமன்ற தீர்ப்பை நான் மதிக்கிறேன் என்றுதான் சொல்லியிருந்தேன். தீர்ப்பை ஏற்றுத்தான் ஆக வேண்டும் இந்திய அரசியலமைப்புக்கு கட்டுப்பட்டவன் என்ற அடிப்படையில். இந்தியாவின் நான்கு தூண்களில் ஒன்றாக கருத்தப்படும் உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. அதனை நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும். ஆனால் தீர்ப்பில் இருக்கும் குறைகளை பற்றி பேசுவோம். தீர்ப்பில் இருக்கும் நீதி தவறிய முறைகளை பற்றி விவாதிப்போம். அப்படியே ஏற்றுக்கொண்டால் அது தவறான முன் உதாரணம் ஆகிவிடும். அதை பற்றி தேவையான அளவு பேசுவோம். அதில் உள்ள நிறை குறைகளை அடுத்து தலை முறைகளுக்கு கொண்டு செல்வோம். இதை ஒரு தீர்ப்பாக பார்ப்பதை விட ஒரு சமரச முயற்சியாகத்தான் இதனை பார்க்க வேண்டியுள்ளது.
நீண்ட காலமாக உள்ள பிரச்சனையில் மீண்டும் ஒரு உயிரிழப்புக்கள் வேண்டாம் என்ற அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பாகத்தான் இதனை கருத வேண்டியுள்ளது. அந்த வகையில் தீர்ப்பு வந்து இத்தனை மணி நேரத்தில் ஒரு சின்ன அசம்பாவிதங்கள் நடைபெறவில்லை என்பது சந்தோஷமான விஷயம். இந்த தீர்ப்பு இந்திய மக்கள் மீது உலக அரங்கில் மதிப்பை உருவாகியுள்ளது. இந்த தீர்ப்பை வைத்து அரசியல் கூட செய்யலாம். ஆனால் யாரும் தன்னுடைய அளவை தாண்டி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நான் இந்த விஷயத்தில் இரண்டையும் பார்த்தவன். இடிக்கும்போதும் பார்த்திருக்கிறேன், இன்று அதுகுறித்தான தீர்ப்பு வெளியான நாளிலும் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். அந்த வகையில் மக்களின் சகிப்பு தன்மை நிறைவாக இருக்கிறது என்பதே எதா்ாத்தமான உண்மை.
இந்த தீர்ப்பு யாரையும் பாதிக்காத வண்ணம் அனைவருக்கும் சமமான நீதியை வழங்கியிருப்பதாக கூறுவதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அப்படி பார்க்க முடியாது. இதுகுறித்து ரொம்ப அதிகமாக பேசி எந்த சர்ச்சையும் நாம் உருவாக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். ராமர் அங்குதான் பிறந்தார்கள் என்று கூறுகிறாகள். அப்படி இருக்கும் பட்சத்தில் அதற்கு எங்களான உதவிகளை செய்யவும் தயாராகக் இருக்கிறோம். அது அவர்களின் நம்பிக்கை. அதில் யாரும் தலையிட முடியாது. ஆனால் முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலம் கொடுத்துவிட்டா்கள் என்று கூறுகிறாகள். முஸ்லிம்கள் இந்த ஐந்து ஏக்கர் நிலத்தைதான் கேட்டா்களா? இதை அவர்களிடம் இல்லாமல் கேட்கிறார்களா? இதை ஒரு சமரச முயற்சியாகத்தான் நாம் பார்க்க வேண்டியுள்ளது.