தமிழகத்தையே பதற வைத்த மதுரை "தினகரன்' பத்திரிகை ஊழியர்கள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், தி.மு.க. தொண்டரணி அமைப்பாளர் அட்டாக்பாண்டி உள்ளிட்ட 9 குற்றவாளிகளுக்கு எதிராக பத்திரிகை ஊடகங்கள் சாட்சி சொல்லாத நிலையில்... ஆசிரியர் நக்கீரன்கோபால், அப்போதைய இணையாசிரியர் காமராஜ் அளித்த சாட்சியங்கள் கொடூரக் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்றுத் தந்திருப்ப தோடு நீதியரசர்களின் பாராட் டையும் பெற்றிருக்கிறது.
கலைஞரின் அரசியல் வாரிசு யார்? என்றக் கருத்துக் கணிப்பை 2007 மே 9-ந் தேதி வெளியிட்டது சன் டி.வி. குழுமத் தின் பத்திரிகையான தினகரன். இதனால், ஆத்திரம் அடைந்த அழகிரி ஆதரவாளரும் தி.மு.க. தொண்டரணி அமைப்பாளருமான அட்டாக்பாண்டி தலைமையிலான அடியாட்கள் தினகரன் பத்திரிகை மீது நடத்திய தாக்கு தல் மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சினால் கம்ப்யூட்டர் ஆபரேட்டர்களான கோபி, வினோத், காவலாளி முத்துராமலிங்கம் ஆகிய அப்பாவி ஊழியர்கள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்கள். தாக்குதல் மற்றும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட பிரத்யேக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நக்கீரனில் முதலில் வெளியானது. தினகரன் பத்திரிகையில் செய்தி வெளியாகவே நக்கீரன் எடுத்த புகைப்படங்கள்தான் உதவின. அதன்பிறகு, பல்வேறு பத்திரிகை ஊடகங்களிலும் வெளியாகி தமிழகத்தையே பதறவைத்தது. அரசியலில் எதிரும் புதிருமாக இருக்கும் ஜெயா டி.வி. நிறு வனத்தினர் உட்பட அனைத்து ஊடகங்களும் அக்கொடூர கொலைக்குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சி சொல்ல மறுத்த தோடு, பலர் பிறழ் சாட்சிகளாகி விட்டார்கள்.
இந்நிலையில்தான், பத்தி ரிகை ஊழியர்களை எரித்துக் கொன்ற வழக்கின் மேல்முறை யீட்டு மனுவில், அட்டாக்பாண்டி உள்ளிட்ட 9 குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனையும் ஓய்வுபெற்ற டி.எஸ்.பி. ராஜாராமுக்கு 5 வருட சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்த நீதிபதிகள் பி.என். பிரகாஷ், புகழேந்தி ஆகியோ ரைக்கொண்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை, "தினகரன் பத்திரிகை அலுவலகத்தின் மீதான தாக்குதல் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என அலறிய, சம்பவத்தில் இறந்துபோன உடல்களைப் பார்த்து முதலைக்கண்ணீர் வடித்த, மெழுகுவத்தி ஏந்தி ஊர்வலம் சென்ற பத்திரிகையாளர்கள், நீதிமன்றம் அழைப்பாணை கொடுத்தும் சாட்சி சொல்ல முன்வராத நிலையில்... அரசுத்தரப்பு சாட்சிகளான நக்கீரன்கோபால், நக்கீரன் (அப்போதைய) இணையாசிரியர் காமராஜ் (தற்போது இவர் பணியில் இல்லை) இருவரும் நீதிமன்றத்துக்கு வந்து "பத்திரிகையில் வெளியான புகைப்படம் வீடியோக்கள் உண்மைதான்' என்று சொன்ன சாட்சியம்தான் அரசுத்தரப்புக்கு வலுவான சான்றாக அமைந்துள்ளது'’ என்று குறிப்பிட்டு பாராட்டியிருக்கிறது.
இத்தீர்ப்பை வரவேற்று தனது கருத்தை தெரிவித்த உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சுதந்திரம், “மற்ற அனைத்துப் பத்திரிகை ஊடக நிருபர்கள், புகைப்படக்காரர்கள், ஜெயா டி.வி. வீடியோகிராபர்கள் உட்பட, சாட்சி சொல்ல முன்வராத நிலையில்... நக்கீரன் மட்டும் சாட்சி சொன்னது வழக்குக்கு வலுவாக அமைந்தது. பாராட்டத்தக்கது. "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே'’ என்பதை அவர்கள் நிரூபித்திருக்கிறார்கள்''’என்று சுட்டிக்காட்டி பாராட்டி யுள்ளார்.