Skip to main content

தமிழர்களுக்கு பொங்கல்...அஸ்ஸாம், குஜராத்தில் என்ன?

Published on 13/01/2019 | Edited on 13/01/2019

 

வாழ்வதற்கு அவசியமானது உணவு. அதை அளித்த  இயற்கைக்கு  நன்றி செலுத்தும் விதமாக தை ஒன்றாம் நாள்(ஜனவரி 14 அல்லது 15)  உலகம் முழுவதுமுள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த முறை 15ஆம் தேதி. பொங்கல் பண்டிகையை போன்றே இந்தியா முழுவதும் பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. அதெல்லாம் என்ன பண்டிகை, ஏன் கொண்டாடப்படுகிறது என்று பார்ப்போம்...

 

ஆந்திரா மற்றும் தெலுங்கானா 
 

andhra


"சங்கிராந்தி" என்ற பெயரில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கொண்டாடப்படுகிறது. நாம் இனிப்பு மற்றும் வெண் பொங்கல் வைப்பதை போலவே இவர்கள் அப்பளம்(அதிரசம் போல) காரம், இனிப்பு என்று வகை, வகையாக கடவுளுக்கு படைத்துவிட்டு தாங்களும் சாப்பிடுகின்றனர். வீட்டின் முன் கோலம் போடுவது, பூக்களால் அலங்காரம் செய்வது என்று அப்படியே பொங்கல் பண்டிகை போலவே கொண்டாடப்படுகிறது.  

 

அஸ்ஸாம் 
 

assam


"மாக் பிஹு" அல்லது  “போஹாலி” என்ற பெயரில் அஸ்ஸாமில் கொண்டாடப்படுகிறது. இதுவும் அறுவடைக்கான பண்டிகைதான். மூங்கில் இலைகளை கொண்டு கீற்று நெய்து அதனை அன்று இரவு எரித்துவிடுவர். கிடா சண்டை போல் அங்கு எருமை மாட்டு சண்டை நடக்கும்.

 

பிஹார் 
 

bihar


"கிச்சடி" என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. வெல்லத்தை வைத்து தயாரிக்கப்படும் லட்டுதான் இந்த பண்டிகையின் ஸ்பெஷல். 

 

குஜராத் 
 

gujarath


"உத்தராயன்" எனும் பெயரில் கொண்டாடப்படுகிறது. இது உலக பேமஸ், காரணம் இங்கு இந்த பண்டிகையை ஒட்டி நடத்தப்படும் பட்டம் விடும் விழா. உலகில் பல நாடுகளில் இருந்து வந்து இங்கு வித விதமாக பட்டம் விட்டுச்செல்கின்றனர்.

 

கர்நாடகா 
 

karnataka


மாடுகளை அலங்கரித்து, நவதானியங்களில் உணவு, வித, விதமான காய்கறிகளில் கூட்டு, பொரியல் செய்து குடும்பத்துடன் சேர்ந்து உண்ணுவதுதான் "மஹர் சங்கிராந்தி".

 

இந்தியாவில் நிறைய மாநிலங்களில் இந்த பண்டிகையெல்லாம் "மஹர் சங்கிராந்தி" என்ற பெயரில்தான் அழைக்கப்படுகிறது. நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளும் அன்று அறுவடைக்காகவும், இயற்கையை வழிபடும் வகையிலும் கொண்டாடுகின்றன.