இன்று (15.07.2019) அதிகாலை 2.51 மணிக்கு சந்திரயான் -2 ஜி.எஸ்.எல்.வி. மார்க் III ராக்கேட் மூலம் விண்ணில் ஏவுவதாக இருந்தது. ஆனால் 1.55 மணியளவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் விண்ணில் ஏவுவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009ம் ஆண்டில் சந்திரயான் -1 வெற்றியைத் தொடர்ந்து, சந்திரயான் -2 திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த 10 ஆண்டு உழைப்பும், கிட்டதட்ட 1000 கோடி ரூபாயும் வீணாகாமல் தடுக்கப்பட்டுள்ளது என இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்துவருகின்றன.
ராக்கேட்டிலிருந்து வாயு வெளியேறியதாலேயே இந்த நிகழ்வு நிறுத்தப்பட்டது. ஒருவேளை இதை கவனிக்காமலோ அல்லது அது நேரம் கடந்து நடந்திருந்தாலோ ஒரு பெரும் விபத்து நடந்திருக்கும். நல்லவேளையாக அது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இது தோல்வி என்று கூறுகின்றனர், எங்களைப் பொறுத்தவரை இதை சரியான நேரத்தில் கண்டறிந்து நிறுத்தி, பெரும் விபத்து நடக்காமல் தடுத்ததே மிகப்பெரிய வெற்றி எனவும் ஒரு குழுவினர் தெரிவித்துவருகின்றனர்.