Skip to main content

கர்நாடக சபாநாயகர் ரமேஷை நீக்க வேண்டும் - எடியூரப்பா போர்க்கொடி

Published on 27/07/2019 | Edited on 27/07/2019

 

கர்நாடகாவில் இன்று உருவாகியிருக்கும் நிலைக்கு காரணம் காங்கிரஸின் சித்தராமையாவுக்கும், முதல்வர் எச்.டி.குமாரசாமிக்கும் இடையே நடைபெற்ற மோதல்தான் என்கின்றனர் இருகட்சியைச் சேர்ந்தவர்களும். 
 

சித்தராமையாவுக்கு நெருக்கமானவர் ராமலிங்கம் என்கிற ஏழு தடவை கர்நாடக எம்எல்ஏவாக ஜெயித்த நபர். இவரை நம்பித்தான் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏழு எம்எல்ஏக்கள் சென்றனர். இந்த வாய்ப்பை பாஜக பயன்படுத்திக்கொண்டது. காங்கிரஸ் கட்சியில் இருந்தால் நீங்கள் 30 கோடி சம்பாதிப்பீர்கள். அந்த தொகையை நாங்கள் கொடுத்துவிடுகிறோம் என்பதுதான் பாஜக இந்த எம்எல்ஏக்களிடம் வைத்திருக்கும் டீல்.

 

BSYeddyurappa


நாங்கள் சித்தராமையா சொற்படித்தான் குமாரசாமியின் ஆட்சியை கவிழ்க்க முயற்சித்தோம் என சிவராம்ஹெப்பர் என்கிற அதிருப்தி எம்எல்ஏ இன்று வரை பேசிக்கொண்டிருக்கிறார். ஒருவேளை சித்தராமையா நினைத்தால் எடியூரப்பா அரசு கவிழ்ந்துவிடும். அவர் அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரையும் காங்கிரஸ் ஆதரவு நிலைக்கு கொண்டுவந்துவிடுவார் என்பதால்தான் எடியூரப்பா அவர் மட்டும் முதல்வராக பதவி ஏற்கிறார். 


 

தேவகௌடா சித்தராமையா மீது இரண்டு தடவை புகார் செய்திருக்கிறார். ராகுல்காந்தியும் காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்கள் உள்ளிருந்துகொண்டே கவிழ்த்ததால்தான் குமாரசாமியின் அரசு கவிழ்ந்தது என்று சொல்லியிருக்கிறார். இந்த நிலையில் சபாநாயகர் ரமேஷ் இரண்டு அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி இழப்பு செய்திருக்கிறார். இவர்களது தகுதி இழப்பு என்பது தமிழ்நாட்டில் நடந்ததுபோல் இல்லை. இவர்களது சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தல்களில் மறுபடியும் போட்டியிடக்கூடாது என புதுவிதமான கண்டிஷன்களைப்போட்டு சஸ்பெண்ட் செய்து வருகிறார். இவரை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. 


 

வருகிற 31ஆம் தேதி நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா வெற்றி பெற்றார் என்றால் அடுத்த ஆறு மாதத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் அரசை ஓட்டலாம். அப்படி வெற்றி பெற வேண்டும் என்றால் மகாராஷ்டிராவில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்கள் கர்நாடகத்திற்கு வரக்கூடாது. ஆனால் தற்போது இருக்கும் சபாநாயகர் இரண்டு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்துவிட்டு, மற்ற எம்எல்ஏக்களை காங்கிரஸ் வசம் கொண்டுவர வலைவிரிக்கிறார். இதற்காக சித்தராமையாவின் உதவியையும் கோருகிறார். இந்த புதிய கேம் பிளானை முறியடிக்க சபாநாயகர் ரமேஷை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என எடியூரப்பா ஒற்றைக் காலில் நின்று கோரிக்கை வைத்துள்ளார். 
 

சார்ந்த செய்திகள்