பூனைகளுக்குப் பதவி தரும் ஆங்கிலேய அரசு...
ட்விட்டரில் 50,000 ஃபாலோவர்ஸ்

லாரா டாபனுடன் லாரன்ஸ் பூனை
பூனைகளுக்கு லண்டனில் உள்ள மினிஸ்ட்ரியில் எலி பிடிக்கும் பொறுப்பு தரப்படுகிறது. இது பல வருடங்களாக நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து பிரதமர்களின் இல்லத்தில் வளர்க்கப்படும் பூனைகளுக்கு இந்த அந்தஸ்து கொடுக்கப்படுகிறது. தற்போது லண்டனில் உள்ள அமைச்சரவை அலுவலகத்தில் 'பால்மெர்ஸ்டன்' என்ற பூனையே தலைமை வகித்து வருகிறது( இவர் டூட்டில ரொம்ப ஸ்ட்ரிக்ட்). இதுபோல உலகில் உள்ள அனைத்து பிரிட்டிஷ் தூதரகத்திலும் பூனைகளுக்கு பொறுப்பு கொடுக்கப்படுகிறது. ஜோர்டானில் உள்ள தூதரகத்திலும் 'லாரன்ஸ் ஆஃப் அபவுண்ட்' என்ற மீட்பு பூனையை பொறுப்பில் நியமித்துள்ளனர். முன்னாள் பிரிட்டிஷ் படை வீரரான லாரன்ஸ் என்பவரின் பெயரை இந்தப் பூனைக்கு வைத்துள்ளனர்.
இவருக்கு எலி பிடிப்பது மட்டும் வேலை இல்லை. டிவிட்டரில் தன்னை ஃபாலோ செய்யும் 2500 பேருக்கும் மினிஸ்டரியில் நடக்கும் தகவல்களை தெரிவிப்பதும், ஜோர்டானில் உள்ள இடங்களை பற்றி பதிவிடுவதும் கூட இவர் பெயரில் நடக்கிறது. இது அனைத்தும் லண்டனில் இருக்கும் தலைமை அதிகாரி பூனையின் டிவிட்டருக்கு அனுப்பப்படும். லண்டன் பூனைக்கு 50,000 ஃபாலோவர்ஸ் என்பதால் பிரிட்டிஷ் மக்களுக்கு ஜோர்டான் நாட்டைப் பற்றி தெரிந்துகொள்ள முடியும் என்கிறார் ஜோர்டானுக்கான பிரிட்டிஷ் துணை தூதர் லாரா டாபன். இந்த பூனைகளுக்கு வேலை கொடுக்கும் வழக்கம் 1989 இருந்து வழக்கத்தில் இருந்துவருகிறது. லண்டன் பத்திரிகைகளோ 1924இல் இருந்தே நடைபெறுகிறது என்று சொல்கின்றன. (எது என்னவோ பிறந்தா இந்த பூனைகள் மாதிரி பிறக்கனும்...)

தலைமை பூனை பால்மெர்ஸ்டன்
லண்டனில் இருக்கும் தலைமை பூனைக்கு இருக்கும் ரசிகர் கூட்டம், ஜோர்டானில் இருக்கும் பூனைக்கு இல்லை. இந்த பூனையின் பதிவை பார்த்து கலாய்த்திருக்கின்றனர் அந்த ஊர் சமூக வலைதள போராளிகள். அவர்கள் பூனையின் வேலையை பார்த்து கலாய்த்திருந்தால் கூட பரவாயில்லை, அதன் தோற்றத்தைப் பார்த்து கலாய்த்துள்ளனர். அதனால் சோகமான பூனை உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
சந்தோஷ் குமார்