
சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 15 பேர் குற்றவாளிகள் என போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் நேற்று முன் தினம் அறிவித்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் குணசேகரன் ஒருவரைத் தவிர மற்ற அனைவரையும் குற்றவாளியாக அறிவித்தது நீதிமன்றம். இந்நிலையில் இன்று 15 பேருக்குமான தண்டனை விபரத்தை அறிவித்தார் நீதிபதி மஞ்சுளா. குற்றவாளிகளில் ரவிக்குமார்(லிப்ட் ஆபரேட்டர்) , சுரேஷ்(பிளம்பர்), அபிஷேக்(காவலாளி), பழனி(காவலாளி) ஆகிய 4 பேருக்கு ஆயுள்கால சிறை தண்டனையும், பரமசிவன், ஜெய்கணேஷ், சுகுமாறன், முருகேசன் உள்ளிட்ட 9 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ராஜசேகர் ( வீட்டு வேலைக்காரர்) என்பவருக்கு ஆயுள் தண்டனையும், ஏரல் ப்ராஸ் என்பவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை, அதே குடியிருப்பில் வேலை பார்த்து வந்த காவலாளி பழனி (வயது 40), பிளம்பர் ஜெய்கணேஷ் (23), லிப்ட் ஆபரேட்டர்கள் தீனதயாளன் (50), பாபு (36) உள்பட 17 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை இவர்கள் ஒருவர் பின் ஒருவராக அந்த சிறுமியை வன்கொடுமை பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக அயனாவரம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 17 பேரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 7 சாட்சிகளும், அரசு தரப்பில் 36 சாட்சிகளும் விசாரிக்கப்பட்டன. இரு தரப்பிலும் 43 சாட்சிகளும் விசாரிக்கப்பட்டு 120 ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கடந்த 2018 ஜூலையில் 17 பேர் கைது செய்யப்பட்டனர். போக்சோ சட்டத்தின்கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், 2019 ஜனவரி 11-இல் நீதிமன்றம் அதனை ரத்து செய்தது.
இதன்பின்னர் சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில், இவ்வழக்கின் விசாரணை நடைபெற்றது. பின்னர் போக்சோ நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கின் வாதப் பிரதிவாதங்கள், சாட்சிகள் விசாரணை, குறுக்கு விசாரணை கடந்த மாதம் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கில் பிப்ரவரி 1-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 17 பேரில் ஒருவர் இறந்து விட்டதால் 16 பேர் மீதான குற்றச்சாட்டில் தீர்ப்பு வழங்கப்பட இருந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் குணசேகரன் ஒருவரைத்தவிர மற்ற அனைவரையும் குற்றவாளியாக அறிவித்தது நீதிமன்றம்.
இந்நிலையில் இன்று 15 பேருக்குமான தண்டனை விபரத்தை அறிவித்தார் நீதிபதி மஞ்சுளா. குற்றவாளிகளில் ரவிக்குமார்(லிப்ட் ஆபரேட்டர்) , சுரேஷ்(பிளம்பர்), அபிஷேக்(காவலாளி), பழனி(காவலாளி) ஆகிய 4 பேருக்கு ஆயுள்கால சிறை தண்டனையும், பரமசிவன், ஜெய்கணேஷ், சுகுமாறன், முருகேசன் உள்ளிட்ட 9 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ராஜசேகர் ( வீட்டு வேலைக்காரர்) என்பவருக்கு ஆயுள் தண்டனையும், ஏரல் ப்ராஸ் என்பவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.