Skip to main content

அடுத்தவன் கம்பெனிக்கு

Published on 25/09/2017 | Edited on 26/09/2017
அடுத்தவன் கம்பெனிக்கு தன் பெயர் வைக்கும் பாஜக! 

அடுத்தவங்க சொத்துக்கு உரிமை கொண்டாடுவது எப்பவுமே இந்துத்துவா வெறியர்களுக்கு கைவந்த கலை. சிந்து சமவெளி நாகரிகத்தை ஆரிய நாகரிகம்னு சொன்னதிலிருந்து, இந்து என்ற இல்லாத ஒரு மதத்தை இருப்பதாக சொல்வது வரை அவர்களின் பொழப்பே இப்படித்தான் போகிறது.

சமீப காலமாக பாஜக தனது இருப்பை தக்கவைக்க புதிய உத்தியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அந்தக் கட்சியின் கார்ப்பரேட் சகவாசம் அமித்ஷாவை இப்படியெல்லாம் யோசிக்க வைத்திருக்கிறது.

கட்சியே இல்லாத ஒரு ஊரில் இன்னொரு கட்சியை விலைக்கு வாங்கி, தனது பெயரை சூட்டிக் கொள்வதுதான் அமித்ஷாவின் பாணியாக மாறிக் கொண்டிருக்கிறது.


மக்கள் தோற்கடித்தாலும் சுயேச்சைகளையும் சிறிய கட்சிகளையும் விலைக்கு வாங்கி ஆட்சி அமைப்பதை சாதனையாக்கியவர் அமித் ஷா. கட்சியே இல்லாத திரிபுராவில் சில எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி பாஜகவை எதிர்க்கட்சி ஆக்கியிருக்கிறார்.

வெறும் எம்எல்ஏக்களை மட்டுமோ, சில தலைவர்களை மட்டுமோ விலைக்கு வாங்கிவிட்டால் கட்சிக்கு ஆள் சேர்ந்துவிடுவார்களா? என்று யாரும் கேட்கக்கூடாது.

இப்போது, மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு பாப்புலரான லீடர் வேண்டும் என்பதற்காக திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர் முகுல் ராயை விலை பேசியிருக்கிறார் அமித் ஷா.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவரும், மம்தா பேனர்ஜிக்கு அடுத்த தலைவராகவும் கருதப்படும் முகுல் ராய் அந்தக் கட்சியின் மாநிலங்களரை உறுப்பினராக இருக்கிறார். துர்கா பூஜை கொண்டாட்டங்கள் முடிந்தவுடன் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்யப்போவதாக முகுல் ராய் கூறியிருக்கிறார்.



அதற்கு முன்னதாக, கட்சியின் செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். தனது முடிவுக்கான காரணத்தை பிறகு தெரிவிப்பதாக கூறியிருக்கிறார். இப்படிப்பட்டவர்கள் என்ன காரணம் கூறுவார்கள் என்பது நமக்கு தெரியாதா என்ன?

பாஜகவின் மாநிலத் தலைவராக நியமிக்கப்படுவார். அப்படியே, தனது ஆதரவாளர்களை பாஜகவில் சேர்ப்பார். மம்தாவுக்கு எதிராக செய்திகளில் பரபரப்பாக அடிபடுவார். ஆனால், மக்கள் ஆதரவை பாஜகவுக்கு பெற்றுத் தருவாரா என்பது போகபோகத்தானே தெரியும்.

என்னதான் இருந்தாலும், கம்பெனி இல்லாத ஊரில், ஏற்கெனவே இருக்கிற ஒரு கம்பெனியை விலைக்கு வாங்கி தனது கம்பெனியாக்கும் கார்பரேட் தந்திரம்தான் அமித் ஷாவின் தந்திரம்.

- ஆதனூர் சோழன்

சார்ந்த செய்திகள்