Skip to main content

எம்.ஜி.ஆருக்கு அண்ணா;சிவாஜிக்கு காமராஜர்! -கர்மவீரர் புகழ் பாடிய வெள்ளித்திரை!

Published on 15/07/2020 | Edited on 15/07/2020

 

‘கல்விக் கடவுள் காமராஜர் பிறந்த நாளில், கலைக்கடவுளின் அன்பு இதயங்கள் வணங்குகிறோம்..’ என்று மதுரையில் சிவாஜி ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியிருக்கின்றனர். அந்த போஸ்டர்களைப் பார்த்ததும், பழைய நினைவுகள் நிழலாடியது. 

 

அறிஞர் அண்ணாதுரையை, சினிமாவில் எப்படி எம்.ஜி.ஆர். போற்றி வந்தாரோ, அதுபோல், சினிமாவில் கர்மவீரர் காமராஜரின் புகழ்பாடினார், சிவாஜி.  

 

1972-ல் வெளியான பட்டிக்காடா பட்டணமா திரைப்படத்தில், 

 

‘சிவகாமி உமையவளே முத்துமாரி –
உன் செல்வனுக்கும் காலமுண்டு முத்துமாரி
மகராஜன் வாழ்கவென்று வாழ்த்து கூறி – இந்த
மக்களெல்லாம் போற்ற வேண்டும் கோட்டை ஏறி’ 

என, மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மலர்ந்து, காமராஜர் தமிழக முதல்வராக வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு,  ‘அம்பிகையே.. ஈஸ்வரியே..’ என்ற பாடலில், இந்த வரிகள் இடம்பெற்றன.  

1974-ல் ரிலீஸான சிவகாமியின் செல்வன் திரைப்படத்தில் –

‘சிவகாமி பெற்றெடுத்த செல்வனல்லவோ!
நாளை இந்த மண்ணையாளும் மன்னன் அல்லவோ!’ 

என, ’எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே..’ என்ற பாடலில் வரும் வரிகள் இவை. 

காமராஜர் இயற்கை எய்திய ஆண்டான 1975-ல் வெளிவந்தது ‘மன்னவன் வந்தானடி’ திரைப்படம். அதில், ‘நான் நாட்டை திருத்தப் போறேன்..’ என்ற பாடலில், 

 

நாட்டிலுள்ள பெருந்தலைவர் 
காட்டி வச்ச பாதையிலே
நாட்டையே ஆளப் போறேன்..’

என்று சிவாஜி பாடுவார். 

1977-ல் வெளிவந்த ‘அவன் ஒரு சரித்திரம்’ திரைப்படத்தில் வரும் ‘நாளை என்ன நாளை.. இன்றுகூட நமதுதான்..’ என்ற பாடலில் கீழ்க்கண்ட வரிகளை இடம்பெற செய்திருந்தனர்.

 

‘மாபெரும் தலைவர் சொன்ன மானத்தோடு வாழ்வோம்!
நாட்டு மக்கள் நல்லவருக்கு வாக்கு சீட்டு தருகவே!’

என்று, காமராஜரின் கொள்கையை விளக்கி, வாக்காளர்களிடம் கோரிக்கை வைக்கும் விதத்தில் அந்த பாடல் காட்சியை அமைத்திருந்தனர். 

 

சிவாஜி கணேசனையும், கவிஞர் கண்ணதாசனையும் காமராஜரின் பக்தர்கள் என்று சொல்வதே சரியாக இருக்கும். அதனால்தான், சினிமாவை அவ்வளவாக பிடிக்காத காமராஜரை, திரையிலும் போற்ற முடிந்தது. 

 

சிவாஜி ரசிகர்கள் சாதிகளுக்கு அப்பாற்பட்டவர்கள் ஆவர். அந்த போஸ்டர்களுக்கிடையே, காமராஜரை வாழ்த்திய வேறு சில போஸ்டர்களையும் காண நேரிட்டது. 

 

ஒரு போஸ்டரில் ’நாடார்களின் இரட்டை திருவிழா’ என, நாடாண்ட முதல்வரே! நாளை நாடாளும் முதல்வரே!’ என்று குறிப்பிட்டு, காமராஜரோடு, நடிகர் சரத்குமாரையும் இணைத்து வாழ்த்தியிருக்கின்றனர். இன்னொரு போஸ்டரில், ‘பெருந்தலைவர் பிறந்தநாள் திருவிழா’ என்பது சிறிய எழுத்துகளிலும், ‘நாடார் சமுதாயமே!’ என்பது பெரிய எழுத்துகளிலும் போட்டிருந்தனர்.

 

தமிழகம் மட்டுமல்ல, தேசமே கொண்டாட வேண்டியவர் பெருந்தலைவர் காமராஜர் என்பதே நிதர்சனம்!

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
PM Modi remembers former CM of Tn

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16.03.2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டன. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

அந்த வகையில், ஐந்து முறை தமிழகத்திற்கு வந்திருந்த பிரதமர் மோடி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் முதன் முறையாக நேற்று (18.03.2024) தமிழகம் வந்திருந்தார். இதனையடுத்து பா.ஜ.க. சார்பில் கோவையில் நடைபெற்ற பிரமாண்ட வாகன அணிவகுப்பில் (ரோடு ஷோ) பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது திறந்த வெளி வாகனத்தில் பேரணியாகச் சென்று சாலையில் இருபுறமும் உள்ள மக்களை நோக்கி கையசைத்தவாறே பேரணியில் ஈடுபட்டார். இந்த வாகனத்தில் மத்திய இணையமைச்சர் எல். முருகன், பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தார். இந்த பேரணியை ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே சென்று மாலை 6:45 மணிக்கு நிறைவு செய்தார். அதனைத் தொடர்ந்து கேரள மாநிலம் பாலக்காடு சென்று பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

இந்நிலையில், பாலக்காட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி சேலத்திற்கு வந்தார். அங்கு கெஜல்நாயக்கன்பட்டி என்ற இடத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பரப்புரை பொதுக்கூட்டத்தில் மோடி உரையாற்றினார். முன்னதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் கைகளைப் பிடித்துக்கொண்டு மோடி நலம் விசாரித்தார். இந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. கூட்டணி கட்சித் தலைவர்களான ஓ.பி.எஸ்., ராமதாஸ், பாரிவேந்தர், ஏ.சி. சண்முகம், அன்புமணி ராமதாஸ், டி.டி.வி. தினகரன், சரத்குமார், ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

PM Modi remembers former CM of Tn

இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், பாரத அன்னை வாழ்க. எனதருமை தமிழ் சகோதர சகோதரிகளே எனத் தமிழில் பேச்சை தொடங்கினார். மேலும், “கோட்டை மாரியம்மன் வாழும் புண்ணிய பூமிக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவால் தி.மு.க.வுக்கு தூக்கம் தொலைந்துவிட்டது. தமிழகத்தில் எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவு பற்றித்தான் நாடு முழுவதும் இப்போது பேச்சாக இருக்கிறது. ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கொலை செய்யப்பட்டதை மறக்கவே முடியாது. கட்சிக்காக நேர்மையாக உழைத்தவர்களை படுகொலை செய்துவிட்டார்கள். ராமதாஸின் அனுபவம், அன்புமணியின் திறமை பா.ஜ.க. கூட்டணிக்கு உதவியாக இருக்கும். வளர்ச்சியடைந்த இந்தியா, வளர்ச்சியடைந்த தமிழகத்தை அமைக்க 400 இடங்களைத் தாண்ட வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தி.மு.க.வினர் எவ்வளவு இழிவுபடுத்தினர் என்பதை நினைத்து பாருங்கள். தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரான காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டம்தான் எனக்கு உத்வேகம் அளித்தது. ஜி.கே. மூப்பனாரை பிரதமராக விடாமல் தடுத்தது காங்கிரஸ்தான்” எனத் தெரிவித்தார்.