தமிழ்நாடு அரசின் காலை உணவுத் திட்டம் குறித்து விமர்சித்து எழுதிய தினமலர் பத்திரிகை குறித்து தன்னுடைய கருத்துக்களை விரிவாக எடுத்துரைக்கிறார் வழக்கறிஞர் பாலு
தினமலர் வெளியிட்ட செய்தியைப் பார்த்த பிறகு ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒரே குரலில் பேசுவதைப் பார்க்க முடிகிறது. இது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். கொழுப்பு அதிகமாக இருந்தால் தான் இப்படி எழுதத் தோன்றும். இதுபோன்ற பேச்சுக்களும் எழுத்துக்களும் சமீபகாலத்தில் அதிகம் வெளிவருகின்றன. பசியால் குழந்தைகள் பள்ளிக்கு வராமல் இருப்பதைத் தடுக்க வேண்டும் என்கிற நோக்கத்திலேயே தமிழ்நாட்டு தலைவர்கள் சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி விரிவுபடுத்தினர். தமிழ்நாடு இவ்வளவு முன்னேறியிருப்பதற்கு படிப்புதான் காரணம்.
காமராஜரை தமிழ்நாடு இன்றும் நன்றியோடு பார்க்கிறது. அடுத்து வந்த தலைவர்களும் சத்துணவு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வந்தனர். அப்படிப்பட்ட திட்டத்தின் நவீன வடிவமாக இருக்கும் காலை உணவுத் திட்டம் பற்றி திமிருடன் கொச்சையாக எழுதியுள்ளது தினமலர். ஒவ்வொரு மதத்திற்கும் தனியாக உணவு உண்ணும் முறை என்கிற ஒன்று இருக்கிறது. நாங்கள் வெங்காயமும் பூண்டும் சாப்பிட மாட்டோம் என்று கூறினார் நிர்மலா சீதாராமன். இலவசங்கள் வழங்குவதை தவறாகப் பேசிய மோடியும் பாஜகவும், இப்போது தங்களுடைய மாநிலங்களில் இலவசங்களை அறிவித்து வருகின்றனர்.
உண்ணும் உணவைப் பற்றி யாராவது கொச்சைப்படுத்தி எழுதுவார்களா? காமராஜர் சத்துணவு போட்டபோது யாரும் கழிவறைக்கு செல்லவில்லையா? மானம் ரோஷம் உள்ள அனைத்து தமிழர்களும் தினமலரின் செயலை எதிர்ப்பார்கள். குழந்தைகள் உணவு உண்பதை கொச்சைப்படுத்தும் இவர்கள் மிகவும் கேவலமானவர்கள். இப்போது மக்கள் பண்பட்ட வாழ்க்கையை வாழ்கிறார்கள். முன்பு போல் இருந்திருந்தால் இவர்கள் தெருவில் நடமாட முடியாது. இதை எழுதியவர் பிராமணர் அல்ல என்று சொல்லி சமாளிப்பது இன்னும் கேவலமான விஷயம்.
யார் எழுதியிருந்தாலும் சரியான முறையில் எடிட் செய்ய வேண்டியது பத்திரிகை முதலாளியின் கடமை. இதை நியாயப்படுத்தும் விஷப்பூச்சிகளை நாம் அறிந்துகொள்ள வேண்டும். சாப்பாட்டைப் பற்றி எழுதாத எழுத்தாளர்களே கிடையாது. இதுபோன்று எழுதும் மனிதாபிமானமற்ற மனிதர்கள் மீது துப்புவதற்காக நம்முடைய எச்சிலைக் கூட நாம் வீணடிக்கக் கூடாது. இந்த கும்பலை அனைத்து வகைகளிலும் நாம் புறந்தள்ள வேண்டும். இவர்கள் விற்கும் பொருட்களை நாம் வாங்கக்கூடாது. புறக்கணிப்பு தான் இவர்களுக்கு நாம் கொடுக்கும் சரியான பதிலாக இருக்கும்.
கீழே உள்ள லிங்கில் பேட்டியை முழுமையாகக் காணலாம்...