சென்னை குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளையில் வசித்து வந்தவர்ள் விஜயகுமார் - அபிராமி தம்பதியினர். இவர்களுக்கு 7 வயதில் அஜய் என்ற மகனும், 4 வயதில் கார்னிகா என்ற மகளும் இருந்தனர். கடந்த இரண்டு மாதங்களாக பிரியாணி கடை ஊழியர் சுந்தரம் என்பவருடன் ஏற்பட்ட கூடா நட்பு காரணமாக, கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளை கொல்ல திட்டமிட்டு பாலில் விஷம் கலந்து கொடுத்துள்ளார் அபிராமி. அதில் குழந்தைகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தன. கணவன் விஜய் தப்பினார். குழந்தைகளை கொன்று தப்பிய அபிராமி நாகர்கோவிலில் கைது செய்யப்பட்டார். கொலை செய்ய ஆலோசனை சொன்ன சுந்தரமும் கைது செய்யப்பட்டார்.
கொலை சம்பவம் தொடர்பாக குன்றத்தூர் காவல்நிலையம் வந்த அபிராமியின் கணவர் விஜயகுமார் யாரிடமும் பேசாமல் அமைதியாகவே இருந்தார். நீண்ட நேரம் தலை குனிந்தபடியே கண்ணீர் விட்டு அழுதார். அப்போது பணியில் இருந்த காவலர்களிடம், தான் ஒருமுறை கூட குழந்தைகளை அடித்தது இல்லை.
குழந்தைகளின் தேவைகள் உள்பட அனைத்தையும் கவனித்துக்கொண்டது அபிராமிதான். தன் முன்பு ஒருநாள் கூட குழந்தைகளை அபிராமி அடித்தது இல்லை. கூடா நட்பில் அபிராமி விழுந்ததிற்கு பிறகு, பாசம் வைத்திருந்த குழந்தைகளையே கொலை செய்ய முற்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. குடும்பம் நடத்தவே கஷ்டமாக இருந்தாலும் ஸ்கூட்டி வாங்கிக் கொடுத்தேன். அதில் அஜய், கார்னிகா குழந்தைகள் பெயரையும் எழுதிக்கொடுத்ததாக கூறியுள்ளார்.
ஸ்கூட்டி வாகனம் வந்த பிறகுதான் அபிராமியின் நட்பு வட்டம் விரிவடைந்துள்ளது. அந்த வாகனத்தில்தான் அடிக்கடி தோழிகளை பார்க்கப்போகிறேன் என்று சொல்லிவிட்டு வெளியே சென்றிருக்கிறார். குன்றத்தூரில் உள்ள பிரியாணி கடைக்கு அடிக்கடி சென்று சுந்தரத்தை சந்தித்ததும் தெரிய வந்துள்ளது.