Skip to main content

“எப்படி மேக் பண்ணோம்”- ரகசியத்தை உடைக்கும் நோலன்! 

Published on 27/08/2020 | Edited on 27/08/2020
tenet

 

 

'டன்கிரிக்' படத்தைத் தொடர்ந்து பிரம்மாண்ட பொருட்செலவில் கிறிஸ்டஃபர் நோலன் எடுத்திருக்கும் படம் 'டெனட்'. இந்தப் படத்தில் ஜான் டேவிட் வாஷிங்டன் மற்றும் ராபர்ட் பேட்டின்ஸன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். 
 

 

அண்மையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இந்தப் படத்தின் கரு டைம் டிராவல் இல்லை. ஆனால், டைம் இன்வர்ஸ் என்ற அறிவியல் தியேரியை வைத்து எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. முன்னதாக படத்தின் டீஸர் வெளியானபோது, 'டெனட்' படம் உலகம் முழுவதும் ஜூலை 17ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. 
 

 

ஆனால், கரோனா அச்சுறுத்தலால் மூன்று முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு வெளியாக முடியாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளானது டெனட் படக்குழு. தற்போதைய சூழ்நிலையிலும் உலகம் முழுக்க பல நாடுகளில் கரோனா பாதிப்பு குறையாமல் இருப்பதால் திரையரங்குகள் திறக்கப்பட்ட நாடுகளில் மட்டும் திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால் அமெரிக்காவிலும் முதலில் டெனட் படம் ரிலீஸாகாது என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் டெனட் படக்குழு புது டிரைலரை வெளியிட்டது. அதில் செப்டம்பர் 3ஆம் தேதி ரிலீஸ், எங்கு திரையரங்குகள் திறக்கப்பட்டிருக்கிறதோ அங்கெல்லாம் ரிலீஸ் என்று தெரிவித்தது.

 

 

அதற்கு முன்னதாக நேற்று அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் தவிர்த்து 70 நாடுகளில் டெனட் படம் ரிலீஸாகியுள்ளது. அமெரிக்காவில் வருகிற செப்டம்பர் 3ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது படக்குழு. 

 

 

இந்நிலையில் மிகவும் பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட கிறிஸ்டோபர் நோலன் படம் இது. இந்தப் படத்தில் மிகவும் குறைந்தளவிலேயே வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும் பெரும்பாலும் பெரிதாக செட் அமைத்தே கிறிஸ்டஃபர் நோலன் படம் எடுத்திருக்கிறார் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. தற்போது இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வார்னர் ப்ரோஸ் வெளியிட்டுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்