
நடிகர் அஜித்தின் வீரம், வேதாளம், விவேகம் தற்போது விஸ்வாசம் என்று நான்கு படங்களை இயக்கியுள்ளார் சிவா. இந்த கூட்டணி பல வெற்றிகளையும் பல விமர்சனங்களையும் கண்டிருந்தாலும் நான்காவது படமான விஸ்வாசம் வரை வந்தடைந்து, வருகின்ற பத்தாம் தேதி ரிலீஸாக காத்திருக்கிறது. அஜித்துடன் ஐந்து வருடங்கள் தொடர்ந்து பயணம் செய்துள்ளதால் இயக்குனர் சிவாவிடம் அஜித் பற்றி தெரிந்தகொள்ளலாம் என பேசினோம்.
படத்தை தவிர்த்து அஜித் ரொமாண்டிக் பெர்சனாலிட்டியா இல்லை மாஸ் பெர்சனாலிட்டியா?
படத்தை தவிர்த்து அவர் பக்கா மாஸ் பெர்சனாலிட்டி.
அஜித்துக்கு பிடித்த கலர் என்ன? எந்த கலர் ஷர்ட் அதிகமா போடுவார்?
ஒயிட், ரெட் ஷர்ட் அதிகமா போடுவார்.
அவருக்கு எந்த மாதிரி உணவுகள் பிடிக்கும், படப்பிடிப்பில் எந்த மாதிரியான உணவுகளை விரும்பி சாப்பிடுவார்?
அவருக்கு குறிப்பா இந்த உணவுகள்தான் பிடிக்கும்னு கிடையாது. அவரை பொருத்தவரை அவரா சமைச்சு மத்தவங்களுக்கு பரிமாறுவதுதான் ரொம்ப பிடிக்கும். அதுமட்டும் இல்லாம உணவு பரிமாறிட்டு, பக்கத்தில் வந்து நல்லா இருக்கா என கேட்டுட்டே இருப்பார்.
அஜித் எந்த விஷயத்துக்கு ரொம்ப எமோஷனல் ஆவார்?
யாருக்காவது செட்ல அடிப்பட்டா ரொம்ப எமோஷனலாகிடுவார். நம்ப செட்ல யாருக்கும் கஷ்டமாகிடக்கூடாதுனு ரொம்ப கரெக்ட்டா இருப்பார்.
அஜித் கோபப்பட்டு பார்த்திருக்கிங்களா?
கடவுள் புன்னியத்துல, இந்த ஐந்து வருஷத்துல அவர் கோபப்பட்டு பார்த்ததில்லை. ரொம்ப நேர்மையா இருக்கவங்க கோபப்பட்டா, ரொம்ப டெரர்ரா இருக்கும் ஆனால் நல்ல வேளை என் படப்பிடிப்பு தளத்தில அப்படி எதுவும் நடக்கவில்லை.
அஜித் வெக்கப்பட்ட மொமண்ட் அந்த மாதிரி எதுவும் இருக்கா?
அவர் வெக்கப்பட்டு பார்த்ததில்லை. அதான் சொல்றேனே அவர் மாஸான பெர்சனாலிட்டி, எப்படிங்க வெக்கப்படுவார்.
நீங்க ஃப்ரீயாக இருக்கும்போது எதை பற்றி பேசிக்கொண்டே இருப்பார்?
ஜென்ரலா அஜித்துடன் பெர்சனலாக பேசுவதை வெளியே சொல்லமாட்டேன். ஆனால், இந்த காலகட்டத்தில் சொல்வது தவறில்லை, சொல்வது சரியாக இருக்குமென தோணுகிறது. அவர் அடிக்கடி சொல்வது எண்ணம் போல் வாழ்க்கை. இரண்டாவது, நான் சினிமாத்துறைக்கு வேலை தேடி வந்தேன். எனக்கு இங்க வேலை கிடைச்சுருக்கு அதை நான் சின்சியராக பன்றேன். ஒவ்வொரு முறை கிடைக்கும் வாய்ப்பை நான் சிறப்பாக செய்ய வேண்டும் என அடிக்கடி சொல்வார். எனக்கு அவரிடம் மிகவும் பிடித்தது என்றால் கொடுக்கப்பட்ட கடமையை சரியாக செய்ய வேண்டும் என நினைப்பார்.
குறிப்பிட்ட இந்த ஜானரில் படம் பண்ண வேண்டும் என்று உங்களிடம் சொல்லியிருக்காரா?
எனக்கு அவரை வைத்து ஹிஸ்டாரிக்கல் ஜானரில் ஒரு படம் பண்ண வேண்டும் என்று ஆசை இருக்கிறது.
எஃப் டி எஃப் எஸ் பேட்ட அல்லது விஸ்வாசம்?
நான் விஸ்வாசம்தான்.
கடைசியா இந்த படம் பார்த்தேன் நல்லா இருந்தது அதுபோல அஜித் உங்களிடம் எதும் ஷேர் செய்திருக்காரா?
அந்த மாதிரி அவர் எதுவும் பேசினதில்லை. நான் அவர்கிட்ட அப்படி பேசிருக்கேன்.
‘தல’க்கு யாராவது ரோல் மாடலா இருக்காங்களா?
அவர் ரோல்மாடல்னு யாரையும் என்கிட்ட சொன்னதில்லை. எனக்கு தெரிஞ்சு அவருடைய பெற்றோர்கள்தான் ரோல்மாடலாக இருக்க முடியும். ஏனென்றால் இவ்வளவு நல்ல பெர்சனா வளர்ந்திருக்கார் என்றால் வளர்ப்பு ரொம்ப முக்கியம் இல்லைங்களா. நான் எப்பவும் அவர்கிட்ட சொல்லுவேன் உங்க அம்மா அப்பாக்குதான் நன்றி சொல்லனும்னு. ஆனால், அவர் இவங்கதான் ரோல் மாடல்னு சொன்னதில்லை. ரேசர் செனா இருக்காங்கலே, அவரை சாருக்கு ரொம்ப பிடிக்கும்.
சினிமா, ஃபேமிலியை அடுத்து அஜித் நேசிக்கிறார் என்றால் அது கார், பைக்ஸ்தான். அது பற்றி என்ன சொன்னார்?
எனக்கு கார் பைக் பற்றி சுத்தமாவே தெரியாது. எனக்கு பைக்கே ஓட்டத் தெரியாது. அதேபோல காரை பற்றி ஒன்னும் தெரியாது. அதனால அவர் அந்த பாயிண்ட் பற்றி எதுவும் பேசமாட்டார்.
அஜித்துக்காக அவரது ரசிகர்கள் பல விஷயங்கள் செய்கிறார்கள். அதை பற்றி ஏதாவது உங்களிடம் பேசியிருக்கிறாரா?
அவரை பொருத்தவரை ஒன்னே ஒன்னு சொல்வார். ஃபேன்ஸ் மேல அன்பு, பாசம் வச்சிருக்கார். எந்த சூழ்நிலையிலும் என்னுடைய சுயலாபத்துக்காக அவர்களை பயன்படுத்திக்க மாட்டேன் என அடிக்கடி சொல்லியிருக்கார். ஃபேன்ஸ் அனைவரும் அவங்க பெற்றோர்களை பார்த்துகிட்டு, எப்படி அவருடைய வேலையில் முழு கவனம் செலுத்தி உழைக்கிறாரோ, அதேமாதிரி அவர்களும் வேலையில் முழு கவனம் செலுத்தி உழைக்க வேண்டும் என்பதுதான் எனக்கு அவர்கள் செய்யும் பாசமாக இருக்கும். அதைத் தாண்டி அவர்களுக்கு படங்கள் பிடித்தால் அந்த படத்தை பார்க்கனும் அப்படிங்கரது மட்டும்தான் அவர் சொல்வார். ரசிகர்கள் செய்யும் நல்ல காரியங்கள் எல்லாம் அவருக்கு பிடிக்கும், தெரியும் . நல்ல விஷயங்கள் அனைத்தையும் பாராட்டுவார். ஃபேன்ஸ்குள் நடக்கும் மோதல் சுத்தமாக அவருக்கு பிடிக்காது. அவர் அடிக்கடி சொல்வது, ஒருத்தரை நாம் விரும்புகிறோம் என்பதற்காக என்னொருவரை வெறுக்கக் கூடாது. அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதுதான் அஜித்தின் மோட்டோவாக இருக்கிறது.