Skip to main content

அவர் அரசியலுக்கு வர நான் ஆசைப்படுகிறேன் - விஷால் 

Published on 14/05/2018 | Edited on 15/05/2018
irumbu thirai.jpeg

 

 

 

vishal

 

சமீபத்தில் தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகருமான விஷால் நடிப்பில் வெளிவந்த இரும்புத்திரை படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றுள்ளது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ள விஷால் தன் எதிர்கால படத்தை பற்றியும், தன் நட்பு வட்டத்தை பற்றியும் பேசும்போது..."துணை இயக்குநராக சினிமா பயணத்தை துவக்கிய என்னை நடிகனாக பார்த்தவர் நடிகர் அர்ஜுன் தான். அதன் பின்னர் தான் செல்லமே படத்தில் நடித்தேன். நான் நடிகனாக ஆனதற்கு அவர் தான் காரணம். படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகு முதலில் கமர்ஷியல் படங்களில் நடித்தேன். அதற்காக தொடர்ந்து கமர்ஷியல் படங்களை மட்டுமே பண்ண கூடாது என்பதால் பாலாவின் 'அவன் இவன்' எனக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. அதனால் தொடர்ந்து பெயருக்காக மட்டுமே படம் பண்ண முடியாது. வித்தியாசமான படங்களை பண்ணவே ஆசைப்படுகிறேன். 


அடுத்ததாக புதுமுக இயக்குநருடன் இணைகிறேன். அந்த படமும் சமூகத்தின் ஒரு முக்கிய பிரச்சனையை பற்றி பேசும் படம் தான். 'துப்பறிவாளன்' வெற்றிக்கு பிறகு வருடத்திற்கு ஒரு படத்திலாவது மிஷ்கினுடன் இணைய ஆசைப்படுகிறேன். மேலும் அடுத்ததாக 'துப்பறிவாளன்' இரண்டாம் பாகத்தில் அவருடன் மீண்டும் இணையவிருக்கிறேன். சண்டைக் காட்சிகளில் என்னையே வியக்க வைத்தவர் மிஷ்கின்.எனது வாழ்க்கையில் நண்பர்கள் முக்கியமானவர்கள். நமது நிறை, குறைகளை எடுத்துச் சொல்வது நண்பர்கள் தான். எனக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என்றால் எனது நண்பர்களை தான் சொல்வேன். அந்த வகையில், வரலட்சுமி எனக்கு கிடைத்த பொக்கிஷம். அவரை 8 வயதில் இருந்தே எனக்கு தெரியும். நாங்கள் குடும்ப நண்பர்கள். வரலட்சுமி அரசியலுக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அவர் நல்ல தன்னம்பிக்கையான பெண். எனது தவறுகளை சுட்டிக்காட்டி, நல்வழிப்படுத்தி ஊக்கப்படுத்துவார். எனது வாழ்க்கையில் முக்கியமான நபர் அவர். நல்லது, கெட்டது என அனைத்தையும் வரலட்சுமியுடன் தான் பகிர்ந்து கொள்வேன்" என்றார். 

சார்ந்த செய்திகள்