![vijay sethupathi conversation with child video viral on internet](http://image.nakkheeran.in/cdn/farfuture/73lVI2j6rYvQ-0NxtJ_ghaaFmpdQP20IeltY1y5bT-M/1680762469/sites/default/files/inline-images/151_19.jpg)
தென்னிந்திய மொழிகளைத் தாண்டி பாலிவுட் படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அந்த வகையில், இந்தியில் ஜவான், மும்பைக்கார், மெர்ரி கிறிஸ்துமஸ் உள்ளிட்ட படங்கள் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வருகின்றன. அண்மையில் இவர் நடிப்பில் வெளியான 'விடுதலை' படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இப்போது தமிழில், மீண்டும் மணிகண்டன் இயக்கத்தில் ஒரு வெப் தொடரில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மதுரையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விஜய் சேதுபதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு குழந்தையுடன் உரையாடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், விஜய் சேதுபதி, "எதனால என்னைய பார்க்கணும்னு தோணுச்சு..." என்று அந்த குழந்தையிடம கேட்க, "உங்கள பார்க்கணும்னு தோனுச்சு" என மழலையாக பதிலளிக்கிறது. மேலும் விஜய் சேதுபதி கேட்கும் கேள்விகளுக்கு க்யூட்டாக பதிலளிக்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அண்மையில், விஜய் ஒரு குட்டி ரசிகையிடம் வீடியோ கால் மூலம் உரையாடிய வீடியோவும் வைரலானது நினைவுகூரத்தக்கது.