![vijay yesudas](http://image.nakkheeran.in/cdn/farfuture/ohZAZ8A6PG4fuVTq_XpgpNPOHmdQ18P6kI6xmWzSB7k/1603454445/sites/default/files/inline-images/vijay-yesudas_0.jpg)
பிரபல பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ். இவர் பின்னணி பாடகர் யேசுதாஸின் மகனாவார். மலையாளம், தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார். அவரது பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. மேலும் இவர் தனுஷ் நடித்த மாரி படத்தில் வில்லனாகவும் நடித்திருக்கிறார். இதன்பின் படைவீரன் என்னும் படத்தில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார்.
இவர் சிலநாட்களுக்கு முன்பு ஒரு மலையாள பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். அப்பேட்டியில், இனி நான் மலையாளத்தில் பாட மாட்டேன் என்று அவர் கூறியதாக சர்ச்சை எழுந்தது. மலையாளதில் முதன்முதலாக அறிமுகமான இவர் மலையாளத்தில் படமாட்டேன் என கூறியதாக வந்த தகவல் மலையாள ரசிகர்களை கோபமடைய செய்தது. அதை தொடர்ந்து கேரள ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரை திட்டியும் மோசமாக விமர்சித்தும் வந்தனர்.
இந்த நிலையில் விஜய் யேசுதாஸ் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக விளக்கம் அளித்ததுள்ளார். நான் இனி மலையாளத்தில் பாடமாட்டேன் என்று கூறவில்லை. நான் கூறியதை திரித்து தலைப்பாக வைத்து விட்டது என்றார். மேலும் அதில், மலையாளத்தில் இனி பாடல்களை தேர்ந்தெடுத்து பாடுவேன் என்று மட்டுமே கூறினேன் என தெரிவித்துள்ளார் .