Published on 01/10/2018 | Edited on 01/10/2018
![vijay](http://image.nakkheeran.in/cdn/farfuture/wCV0kcCDlYiPGFW6VkVKVkWRpLmTDWIGYw49jbHGM1U/1538418604/sites/default/files/inline-images/Vijay_0.jpg)
பா.ரஞ்சித் தயாரிப்பில் கதிர், கயல் ஆனந்தி நடித்து, புதுமுக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள பரியேறும் பெருமாள் கடந்த வெள்ளியன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையுலக பிரபலங்களும் இப்படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் படத்தை பார்க்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து விஜய் பேசியபோது... "எங்கு பார்த்தாலும் உங்கள் படத்தின் பேச்சாக தான் உள்ளது" என நடிகர் கதிருக்கு நேரடியாக போனில் தொடர்பு கொண்டு வாழ்த்தியுள்ள விஜய் இதை தொடர்ந்து இயக்குனர் மாரிசெல்வராஜையும் தொடர்புகொண்டு... "படத்தை பார்த்துவிட்டு நிறைய உங்களுடன் பேச வேண்டும்" என படக்குழுவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.