Published on 12/04/2021 | Edited on 12/04/2021
![vanitha](http://image.nakkheeran.in/cdn/farfuture/itG5JqdskthhPmvzDGCoaB7xcp4ahsM6Rj7R35SKkxY/1618213666/sites/default/files/inline-images/Eyrb1-hVEAEsnXR.jpg)
இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் ‘அந்தாதுன்’. இந்தியில் எடுக்கப்பட்ட இப்படம் வசூல்ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்றது. இந்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தமிழில் ‘அந்தகன்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்க, அவரது தந்தை தியாகராஜன் இயக்குகிறார்.
தமிழில் நடிகர் கார்த்தி, சிம்ரன், சமுத்திரக்கனி, யோகிபாபு, பிரியா ஆனந்த் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்து வரும் நிலையில், ‘அந்தகன்’ படத்தில் நடிக்க நடிகை வனிதா விஜயகுமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் நடிகர் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.