![thaman join sivakarthikeyan's next movie](http://image.nakkheeran.in/cdn/farfuture/pvgza73-pVSD0tqOm-rzH2R3g7no0cWQEe0h3WICH_Q/1637136249/sites/default/files/inline-images/siva_85.jpg)
அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘டான்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். கல்லூரி கதைக்களத்தில், முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகும் இப்படத்தில், சிவகார்த்திகேயன் மற்றும் சூரி கல்லூரி மாணவர்களாக நடித்துவருவதாக கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து எஸ்.கே. புரோடக்சன் தயாரிக்கிறது. சமீபத்தில் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படப்பிடிப்பை முடித்துள்ள ‘டான்’ படக்குழு, தற்போது இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டிவருகிறது.
![ad](http://image.nakkheeran.in/cdn/farfuture/er1nbJvmAPnQFbgoqnc6LTX_6GtweeNNCN_dL-S83rs/1637136278/sites/default/files/inline-images/jango-inside-news-ad_31.jpg)
இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் தமன் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதனை ரீட்வீட் செய்த தமன், "நன்றி சகோதரர். 'எஸ்கே 21' படத்தில் பின்றோம், தட்றோம், தூக்குறோம்" என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தில் தமன் இசையமைக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. ஆனால், படத்தின் இயக்குநர் யார் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் ‘எஸ்கே 21’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Brother @Siva_Kartikeyan ♥️🤗💃 thanks for the love 🧨#Pinnnnrooommmmm #thattttrooommm #thukkuuroooomm #SK21 🎵🥁🎵 https://t.co/oH60B1riih
— thaman S (@MusicThaman) November 17, 2021