![vijay](http://image.nakkheeran.in/cdn/farfuture/O7yXdUBsjZNh7fK2A1OEilbB0nk_g5DZ5g9-Ob-U1TA/1592810730/sites/default/files/inline-images/vijay-thaman.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் இன்று 45 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் 'மாஸ்டர்' படம் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கரோனா பிரச்சனை முழுவதுமாக முடிந்து மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி, உலகம் முழுவதும் திரையரங்கம் திறந்த பின்னரே இப்படம் ரிலீஸ் செய்யப்படும் என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விஜய்யின் அடுத்த படம் குறித்து பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக தொடங்கிவிட்டன. அதில் பல முன்னணி இயக்குனர்களின் பெயர்கள் அடிப்பட்டன. இதுவரை விஜய்யை வைத்து மூன்று படங்கள் இயக்கிய முருகதாஸின் பெயரும் அந்த லிஸ்ட்டில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதன்பிறகு இயக்குனர் யாராகினும் இசையமைப்பாளர் எஸ். எஸ்.தமன் தான் அந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் என்று பலரும் தெரிவித்தனர். இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தமன் ட்விட்டரில், தளபதி 65 இசையமைப்பாளராக நான் தான் பணிபுரிகிறேன் என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
மெர்சல் படத்தின்போதே தமனும் விஜய்யும் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது. தற்போது இது உண்மையாகியுள்ளது. எஸ்.எஸ். தமன் தெலுங்கு திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர். கடைசியாக அலா வைகுந்தபுரமலோ படத்திற்கு இசையமைத்த பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.