![robert washington](http://image.nakkheeran.in/cdn/farfuture/jHJZiLAiPtOl5HkUqEcoDJ0-laNy4AEeMTerZ6VHltg/1590113011/sites/default/files/inline-images/robert%20washington%20.jpg)
உலகப்புகழ் பெற்ற கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'டெனட்'. இந்தப் படம் கிறிஸ்டோபர் நோலன் எடுத்ததிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட பிரம்மாண்ட சயின்ஸ் பிக்ஷன் படம்.
டன்கிரிக் படத்தைத் தொடர்ந்து கிறிஸ்டோபர் நோலன் சயின்ஸ் பிக்ஷன் அடிப்படையில் படம் எடுக்க இருக்கிறார் என்றவுடனேயே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது. இதன்பின் இந்தப் படம் குறித்து வெளியாகும் தகவல்கள், ட்ரைலர் அனைத்தும் ரசிகர்களை ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.
இப்படத்தில் ஜான் வாஷிங்டன், ராபர்ட் பேட்டின்சன், இந்திய நடிகை டிம்பிள் கபாடியா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். கரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் வெளியாக இருந்த படங்களின் ரிலீஸ் தேதிகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும் இதுவரை 'டெனட்' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு எந்த அறிவிப்பும் தெரிவிக்காமல் இருந்தது வார்னர் ப்ராஸ் தயாரிப்பு நிறுவனம்
இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்போவதாக டிவிகளில் நேற்று விளம்பரப்படுத்தப்பட்டன. இதனை தொடர்ந்து இப்படத்தின் முதல் டீஸர் இரவு 9:30 மணிக்கு வெளியானதுபோல இப்படத்தின் ட்ரைலரும் வெளியாகும் என்று ரசிகர்களாகவே கணித்து காத்திருந்து காத்திருந்து சமூக வலைதளங்களில் புளம்பியதுதான் மிச்சமாக இருந்தது.
இந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்த டெனட் ட்ரைலர் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இன்று காலை ஆறு மணியளவில் வெளியாகி உலகளவில் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது. முன்பு படக்குழு சொன்னதுபோலவே, இப்படம் டைம் ட்ராவல் சம்மந்தப்பட்டதல்ல என்பதை ட்ரைலரில் நன்கு உணர்த்துகிறது. அதேபோல படம் எப்போது ரிலீஸ் என்பதையும் ட்ரைலரில் குறிப்பிடவோ, முன்பு அறிவித்ததை மாற்றவோ இல்லை. தியேட்டர்களில் வெளியாகிறது என்பதை தெளிவுப்படுத்தியுள்ளது.
From Director Christopher Nolan. #TENET, coming to theaters. Watch the new trailer now. pic.twitter.com/qKoPRyHcLE
— TENET (@TENETFilm) May 22, 2020