தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி நடந்த 100வது நாள் போராட்டத்தின் போது போலிசாரால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் இந்த சம்பவத்தால் கடும் அதிர்ச்சி அடைந்த பல்வேறு அரசியல் தரப்பினரும், பொதுமக்களும் தமிழக அரசுக்கு எதிராக கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்துக்கு ரஜினி, கமல், விஷால், சத்யராஜ் உட்பட பல திரையுலக பிரபலங்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும், வீடியோ பதிவாகவும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்ற நிலையில் போராட்டத்தில் தனது உறவினரும் உயிரிழந்துள்ளதாக ஸ்டண்ட் சில்வா அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... "எனது அன்புத்தங்கையின் கணவர் ஆருயிர் மாப்பிள்ளை J. செல்வராஜ் ஸ்டெர்லைட் போராட்டத்தில் அநியாயமாக போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார். மிக்க வேதனையோடு பகிர்கிறேன்" என வேதனையோடு பதிவிட்டுள்ளார்.