![bgds](http://image.nakkheeran.in/cdn/farfuture/DtkNeOLXTcbYxxgBWiqQk_VvpKFSJGLoGkYOmM4HPEw/1590996122/sites/default/files/inline-images/Untitled_77.jpg)
'புதிய மன்னர்கள்' படம் மூலம் அறிமுகமாகி விஜய்யின் 'லவ் டுடே' படம் மூலம் பிரபாலானவர் நடிகர் ஸ்ரீமன். இவர் விஜய்யுடன் இணைந்து 'நிலாவே வா', 'நெஞ்சினிலே', 'ப்ரெண்ட்ஸ்', 'வசீகரா', 'போக்கிரி', 'வில்லு', 'சுறா', 'பைரவா' மற்றும் 'மாஸ்டர்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நிலையில் நடிகர் ஸ்ரீமன் விஜய்யுடன் பழகிய அனுபவம், நாட்கள் குறித்து சமூகவலைத்தளத்தில் போக்கிரி படத்தின் புகைப்படத்தோடு பதிவிட்டுள்ளார். அதில்...
''தளபதி, என் ஆருயிர் நண்பா - என் சகோதரர் லெஜண்ட் பிரபுதேவா மாஸ்டர், பணிவான & அழகான தயாரிப்பாளர் ரமேஷ் அண்ணா. கடவுளே, போக்கிரியில் எத்தனை இனிமையான நினைவுகள். என்னையும், நாசர் சார் இறந்த உடலைக் காண விஜய் ஓடிவரும் காட்சியில், தியேட்டரில் கேட்ட விசில் ஒலி எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. மாஸ்டருக்காகக் காத்திருக்கிறேன்'' எனப் பதிவிட்டு நெகிழ்ந்துள்ளார்.