காக்கா முட்டை படத்தின் மூலம் கவனம் பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். மோகன் தாஸ், துருவ நட்சத்திரம், ட்ரைவர் ஆகிய படத்தில் நடித்து முடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது, லாக்கப் படத்தை இயக்கிய எஸ்.ஜி. சார்லஸ் இயக்கும் சொப்பன சுந்தரி படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருடன் லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், தென்றல் நடிகர்கள் கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
டார்க் காமெடி ஜானரில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அனைத்து படப்பிடிப்புகளும் நிறைவடைந்துவிட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் இறுதி கட்டப் பணிகள் தொடங்கிவுள்ள நிலையில் விரைவில் டீசர் மற்றும் சிங்கிள் ட்ராக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.