Skip to main content

“மதியம் 3 மணி முதல் அதிகாலை 3 மணி வரை” - எல்.ஐ.சி குறித்து எஸ்.ஜே.சூர்யா

Published on 23/12/2023 | Edited on 23/12/2023
sj surya  about lic movie

இயக்குநர் விக்னேஷ் சிவன், அஜித்தின் 62வது படத்தை இயக்க கமிட்டான நிலையில் சில காரணங்களால் அதிலிருந்து விலக்கப்பட்டுவிட்டார். இதையடுத்து பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். கதாநாயாகியாக தெலுங்கு இளம் நடிகை கிரித்தி ஷெட்டி நடிக்கிறார். எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் பணிகள் பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியது. இப்படத்திற்கு ‘எல்.ஐ.சி’ (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தலைப்பு என்னுடையது என்று கூறி இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் எஸ்.எஸ். குமரன், விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடுப்பதாக அறிக்கை வெளியிட்டார். 

இந்த நிலையில் எஸ்.ஜே சூர்யாஇப்படம் குறித்து எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “படத்தின் தலைப்பு எவ்வளவு சுவாரசியமாக உள்ளதோ, படமும் அப்படி இருக்கும். நேற்று மதியம் 3 மணி முதல் அதிகாலை 3 மணி வரை எல்.ஐ.சி படத்திற்காக 12 மணிநேர தொடர்ச்சியான ஒர்க் ஷாப் இருந்தது. அதில் நான், விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் மூவருக்குள்ளும் அற்புதமான உரையாடல்.  விக்னேஷ் சிவன் லவ், காமெடி, பொழுதுபோக்கு என அனைத்தும் நிறைந்த புது காதல் உலகத்திற்கு நம்மை அழைத்து செல்வதில் மும்முரமாக உள்ளார். அதற்காக தன்னால் முடிந்த உழைப்பை செய்து வருகிறார். ப்ரீ ப்ரொடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது . விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது” என்றார்.   

சார்ந்த செய்திகள்