Published on 14/01/2025 | Edited on 14/01/2025
இயக்குநர் க்ரிஷ் இயக்கத்தில் பவன் கல்யாண் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ஹரி ஹர வீரமல்லு . இப்படத்தில் நாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். தெலுங்கு திரைப்படமாக உருவாகும் இப்படம், தமிழில் டப்பிங் செய்யப்பட்டு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழியில் ஒரு பான் இந்தியா படமாக உருவாகிறது.
இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரொமோ வெளியாகி உள்ளது. இந்நிலையில் கேட்கணும் குருவே என்ற முழு பாடலும் 17-ந் தேதி அன்று வெளியாக உள்ளது. இந்த பாடலின் தமிழ் வரிகளை பாடலாசிரியர் பா.விஜய் எழுதியுள்ளார்.