சுந்தர்.சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் சிம்பு நடித்து வெளியான பின் உடல் எடையை குறைப்பதற்காக இரண்டு மாதங்களுக்கு மேல் லண்டனில் தங்கினார் சிம்பு. இப்படத்திற்கு முன்பே சிம்பு நடிப்பதாக ஒப்புக்கொண்ட படம் மாநாடு. அவர் லண்டனில் இருந்து திரும்பியவுடன் அந்த படத்திற்குதான் கால்ஷீட் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் ஞானவேல்ராஜா தயாரிப்பில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து கன்னட படமான மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க கால்ஷீட் கொடுத்தார்.
தற்போது இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் நடைபெற்று முடிந்துவிட்டது. கவுதம் கார்த்திக்கும் சிம்புவை பற்றி புகழ்ந்து தள்ளி பல பதிவுகள் டிவிட்டரில் பதிவிட்டுக்கொண்டிருந்தார். இந்நிலையில் இந்த மாத இறுதியில் மாநாடு ஷூட்டிங்கில் சிம்பு கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிம்பு மாநாடு படத்தின் திரைக்கதையை படிப்பதுபோல வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
முன்னதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, மாநாடு படத்தின் ஷூட்டிங் ஜூலையில் தொடங்கப்படும் என்றும் முதலில் மலேசியாவில் பாடல் காட்சி ஒன்று ஷூட்டிங் எடுக்கப்படுகிறது என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.