![Shivani Narayanan](http://image.nakkheeran.in/cdn/farfuture/suntt9hTVgL4IIzxwgsnXdsam1zNIoZXuvN3xv1wixs/1629801746/sites/default/files/inline-images/80_8.jpg)
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தில் விஜய்சேதுபதி, ஃபகத் பாசில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பைப் பூஜையுடன் தொடங்கிய படக்குழு, முதற்கட்டப் படப்பிடிப்பை சென்னையில் நிறைவு செய்தது. அதனைத் தொடர்ந்து, இரண்டாம்கட்டப் படப்பிடிப்பிற்காக காரைக்குடி விரைந்த படக்குழு, அடுத்த ஒரு மாதத்திற்கு காரைக்குடி சுற்றுவட்டாரப்பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளது.
இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஷிவானி நாராயணன் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், அவர் படக்குழுவோடு இன்று இணைந்துள்ளார். விஜய் சேதுபதி மற்றும் ஷிவானி நாராயணன் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான படப்பிடிப்பு இன்று தொடங்கி உள்ளது. காரைக்குடி சுற்றுவட்டாரப்பகுதியில் நடைபெறும் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் சம்பந்தப்பட்ட முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.