'இரண்டாம் உலகம்' படத்தைத் தொடர்ந்து 'நெஞ்சம் மறப்பதில்லை' மற்றும் 'மன்னவன் வந்தானடி' உள்ளிட்ட இரண்டு படங்களை இயக்கினார் செல்வராகவன். ஆனால், அந்த இந்த இரண்டு படங்களும் பல்வேறு காரணங்களால் தற்போது வரை வெளியாகவில்லை.
![selvaraghavan](http://image.nakkheeran.in/cdn/farfuture/UiSPISTtrxtFTHCwxeRP6gcYRz-5tEvlJKVqVvQtq_8/1587706853/sites/default/files/inline-images/selvaraghavan_2.jpg)
இதனிடையே சூர்யாவை வைத்து 'என்.ஜி.கே' என்றொரு படத்தை ஒன்றரை வருடங்களாக செல்வராகவனால் இயக்கப்பட்டு கடந்த வருடம் ரிலீஸ் செய்யப்பட்டது. இதனையடுத்து தன்னுடைய அடுத்த படம், தனுஷை வைத்து 'புதுப்பேட்டை- 2' இயக்கத் திட்டமிட்டிருப்பதாகச் செல்வராகவனே ஒரு மேடையில் சொன்னது வீடியோவாக வைரலானது.
கரோனா அச்சுறுத்தலால ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் வீட்டிலிருக்கும் செல்வராகவனை அவரது மகன் மற்றும் மகள் இருவரும் சேர்ந்து பிராங்க் செய்துள்ளனர். அந்த வீடியோவை செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Lol the kids just tried to prank @selvaraghavan story, screenplay, dialogue, editing, directing, camera etc. Lila and Omkaar!#TikTok https://t.co/kO2H8yNT9v
— Gitanjali Selvaraghavan (@GitanjaliSelva) April 23, 2020
அந்த வீடியோவில், ஹாலில் இருக்கும் செல்வராகவனை அவரது மகன் ரூமிலிருக்கும் லாம்ப் லைட் சரியாக வேலை செய்யவில்லை, ஒருவேளை எலக்ட்ரி சிட்டி பிரச்சனையாக இருக்கும் என்று சொல்லிக்கொண்டே உள்ளே அழைத்து செல்கிறான். உள்ளே போய் லைட்டை ஆன் செய்ததும், சட்டென்று வெடிப்பதுபோல வந்த வெளிச்சத்தைப் பார்த்து செல்வராகவன் அலறுகிறார். உடனடியாகச் செல்வராகவனைப் பார்த்து, உங்களை வைத்து பிராங்க் செய்துவிட்டோம் என்று சொல்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.