![biskoth](http://image.nakkheeran.in/cdn/farfuture/tW2eAbFT0m7ANCguu9clr2yRWK9to2_V8B1TXTGzLZo/1597992589/sites/default/files/inline-images/biskoth_1.jpg)
பலூன் பட இயக்குனர் சினிஷ் தயாரிப்பில், எழுத்தாளர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் 'டிக்கிலோனா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து, தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமாகியுள்ளார் ஹர்பஜன் சிங்.
யோகி பாபு, அனகா, ஷிரின் ஆனந்த் ராஜ், முனீஸ்காந்த், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன், ஷா ரா, அருண் அலெக்ஸாண்டர், ‘நிழல்கள்’ ரவி, ‘இட் ஈஸ்’ பிரசாந்த் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
ஷூட்டிங் அனைத்துமே முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வந்த நிலையில் இன்று மாலை ஐந்து மணிக்கு ட்ரைலர் வெளியாகுவதாக படக்குழு அறிவித்துள்ளது. அண்மையில்தான் சந்தானம் நடிப்பில் உருவான பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது.