Published on 11/07/2018 | Edited on 11/07/2018
![mr.chandramouli](http://image.nakkheeran.in/cdn/farfuture/4qAI1lqDeNp0V6BUuR_6SVKzasCRxB2431wS8pKjDJg/1533347662/sites/default/files/inline-images/mrchandramouli-banner728x90.jpg)
![samantha](http://image.nakkheeran.in/cdn/farfuture/iDWA6wwrF-d0iwaW2SgN0eyZMJOtg3QbqGtAS0MlBHQ/1533347676/sites/default/files/inline-images/seemaraja.jpg)
சிவகார்த்திகேயன் - சமந்தா இணைந்து நடித்துள்ள 'சீமராஜா' படத்தின் படப்பிடிப்பு கடந்த 20ஆம் தேதி கோலாகலமாக முடிவடைந்த நிலையில் தற்போது படத்தின் டப்பிங் மற்றும் இசைக்கோர்ப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை சமந்தா மற்றும் சூரியுடன் படத்தின் டப்பிங் பணிகள் மொத்தமாக முடிவுக்கு வந்ததாக இயக்குநர் பொன்ராம் தன் ட்விட்டர் பக்கத்தில் தற்போது தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன் - பொன்ராம் மூன்றாவது முறையாக இணைந்துள்ள இப்படத்தில் சூரி, சிம்ரன், நெப்போலியன், யோகி பாபு, மனோபாலா, சதீஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் சிறப்பு தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். டி.இமான் இசையமைத்துள்ள இப்படம் வரும் செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகவுள்ளது.