நடிகர் கார்த்தியுடன் பணிபுரிந்த அனுபவம்...
அவர் ரொம்ப ஜாலியானவர். அதைவிட, கார்த்தி அவர்கூட நடிக்குறவங்கள கம்ஃபர்ட்டா வச்சிப்பாரு, அவர் 16 படம் நடிச்ச பெரிய நடிகர், தேவ் அவரோட 17வது படம். நம்ப 2 படம்தான் பண்ணியிருக்கோம், யு-ட்யூப் வீடியோக்களில் நடிகர் சங்கம் உட்பட எல்லாரையும் கலாய்ச்சுருக்கோம். ஆனால், கார்த்தி சார் அதையெல்லாம் கண்டுக்காமல் சகஜமா போடா வாடான்னு பேசிக்குற அளவுக்கு கம்ஃபர்ட் ஸோன்ல நம்பள வச்சுப்பாரு. அவர்கிட்ட நிறைய கத்துக்கலாம்.
இதுபோல நீங்க கலாய்ச்ச நபர்களை நேரில் சந்திக்கும் போது எப்படி இருக்கும்?
நம்ப ரொம்ப பங்கமா சிலரை கலாய்ச்சிருப்போம், அவங்கள பார்க்கவே முடியாது. அவங்களும் நம்மை பார்க்க நினைக்கமாட்டாங்க. சில பேர கொஞ்சமா கலாய்ச்சுருப்போம், அவங்கள சந்திக்கும்போது நல்லா பேசுவாங்க, முடியும்போது "நான் அந்த வீடியோவ பார்த்தேன்"னு சொல்லிட்டு போய்டுவாங்க. அப்படி சந்திச்சவுங்க யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. சமீபத்துல நடந்த ‘இளையராஜா 75’ நிகழ்ச்சியில் நாங்க பர்ஃபாம் பண்ணோம். அந்த நிகழ்ச்சிக்காக விஷால் எங்களை கூப்பிட போறாருனு செய்தி வந்துச்சு. 'ஏற்கனவே விஷால் எங்கமேல செம கோவத்துல இருப்பாரு, அவர் எப்படி எங்கள கூப்டுவாரு'னு நினைச்சோம். ஆனால், அவர் கால் பண்ணி, ஜாலியா "தம்பி நல்லா பண்ணிடுங்கடா, உங்க டீமுக்கு சொல்ல வேண்டியது இல்ல. உங்க ஸ்டேஜ்டா, விளையாடுங்க"னு சொல்லிட்டு வச்சிட்டாரு. என்னடா இது, ஒருவேளை கூட்டிக்கிட்டுபோய் அடிக்கப் போறாங்களோனு நினைச்சிகிட்டே போய் பர்ஃபார்ம் பண்ணிட்டு வந்தோம். நிகழ்ச்சி முடிஞ்ச பிறகு விஷால் எங்கள கூப்பிட்டு 'நல்லா பண்ணுனீங்க'னு சொன்னாரு. இதுபோல எவ்வளவு கலாய்ச்சு பேசுனாலும் அதை ஸ்போர்ட்டிவா எடுத்துக்கறவங்க இருக்காங்க. அதை நம்பித்தான் நிகழ்ச்சி பண்ணுறோம். இவ்ளோ நல்லா பழகுனப்பறமும் கார்த்தியை பற்றியோ ‘ஹிப் ஹாப்’ ஆதியை பற்றியோ எங்க மனசுல என்ன தோணுதோ அதை தொடர்ந்து பேசத்தான் போறோம். அதுதான் நம்மளோட ப்ளஸ், அதை விட்டுட்டா இவங்களுக்கே நம்பள புடிக்காம போய்டும்.
ஒரு சங்கம் ஆரம்பிச்சீங்களே?
அந்த அளவுக்கு யாரும் அதை மறந்துடல. சங்கம் இருக்கு, ஆனால் செயல்படாம இருக்கு, அவ்ளோதான். கண்டிப்பா இந்த மாதத்துல தமிழ்நாடு டிஜிட்டல் ஊடக சங்கத்தோட (TNDMA) கூட்டம் நடைபெறும். எல்லாரும் கண்டிப்பா கலந்துக்கோங்க. பலபேர் சேர்ந்து உழைச்சு ஒரு படத்தை உருவாக்குறாங்க. அதை மக்கள்கிட்ட கொண்டுபோய் சேர்க்குறதுக்கும் நிறைய கஷ்டப்படுறாங்க. இந்த நிலையில யூ-ட்யூப் விமர்சகர்களுக்கும் பயப்பட வேண்டியிருக்கு. நிறைய பிரச்சனைகளும் இதனால நடக்குது.
இந்த யூ-ட்யூப் திரைப்பட விமர்சனங்கள் பற்றி நீங்க என்ன நினைக்குறீங்க?
யாரோட கருத்தையும் யாரும் தடுக்க முடியாது. விமர்சனங்கள் தனி நபரோட பார்வை, அதை வெளிய சொல்றது அவரோட உரிமையும்கூட. எங்க வீடியோவுக்கும் நிறைய விமர்சனம் வரும். கழுவி கழுவி ஊத்துவாங்க. அது அவங்களோட உரிமை. சொல்றவுங்க என்ன வேணாலும் சொல்லட்டும். நம்ப சரியான கண்டன்ட் இருக்கிற படம் பண்ணுனா எல்லாம் சரியா நடக்கும்.
உங்களுக்கு திருமணமாகிவிட்டது என்று ஒரு வெப்சைட்ல போட்ருக்காங்களே?
இது மாதிரி நிறைய போட்டுருக்காங்க. நான் செத்துட்டேனு கூட சொல்லியிருந்தாங்க. என் பேர 'மேட்ரிமொனி' வெப்சைட்ல பதிவு பண்ணிருக்காங்க. அங்கிருந்து எனக்கு கால் பண்ணி கேக்குறாங்க. ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன். எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல, ஆகும், ஆகாம போகாது.
எல்லோருக்கும் ஒரு கற்பனை, ஆசையெல்லாம் இருக்கும். அதுபோல, உங்களுக்கு வரப்போற மனைவி எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?
எல்லாரையும் போல அம்மாவ மாதிரி ஒரு பொண்ணு வேணும்னு சொல்ல மாட்டேன். எனக்கு மனரீதியா ஒத்துப்போற பொண்ணு வேணும். நான் ஒரு முடிவு எடுத்தா விளக்கி சொல்லாமலே புரிஞ்சுக்குற பொண்ணா இருக்கணும், பெண் என்றால் சமைக்கத்தான் வேணுமானு பெண்ணியம் பேசாம நல்லா சமைச்சு கொடுக்கணும். இது ஒரு பெரிய ‘வானத்தை போல’ குடும்பம். இதுக்கு ஏத்த ‘மீனாவா’ஒரு பொண்ணு வேணும்.
தொடர்ந்து படம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. எந்த மாதிரி கதாபாத்திரம் நடிக்கணும்னு ஆசைப்படுறீங்க?
குணச்சித்திரமான கேரக்டர் பண்ணனும். மணிவண்ணன் மாதிரி அரசியல் நய்யாண்டி, காமெடி, செண்டிமெண்ட் எல்லாம் கலந்து பண்ணனும்னு நினைக்குறேன்.