
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரெஜினா கேசன்ட்ரா தற்போது மீண்டும் தமிழ் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். இவர் நடிப்பில் அடுத்தாக நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி, மிஸ்டர் சந்திரமவுலி வெளியாகவுள்ள நிலையில் தன் அடுத்தடுத்த படங்களை பற்றி ரெஜினா கேசன்ட்ரா பேசுகையில்.... "சென்னையிலேயே பிறந்து வளர்ந்த பெண் நான். தமிழ் சினிமாவைவிட தெலுங்கில் நிறைய படங்கள் நடித்ததால் என்னை ஆந்திரா பெண் என்று நினைக்கிறார்கள். இப்போது தொடர்ந்து தமிழ் படங்களில் வாய்ப்பு வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. சென்னையில் வளர்ந்த எனக்கு நல்ல தமிழ்ப் படங்கள் ஆரம்பத்தில் கிடைக்கவில்லை.இப்போது நிறைய வாய்ப்புகள் தேடி வருகின்றன. முக்கியமாக தமிழில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் நிறைய உருவாகின்றன. எனவே அதுபோன்ற பலமான வேடங்கள் வரும் என்று காத்திருக்கிறேன். மேலும் நான் அடுத்தாக சோனம் கபூருடன் 'ஏக் லடுக்கி கோ தேக்கா தோ ஐஸா லகா' என்ற இந்தியில் படத்தில் நடிக்கிறேன்" என்றார்.