![rajini](http://image.nakkheeran.in/cdn/farfuture/Oycnv2wPCQA3aZgQd7C1CeNW8r6D_lj1SnnP6dcBLPc/1549880318/sites/default/files/inline-images/jjgjgkg.jpg)
இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான சந்தோஷ் சிவன் மணிரத்னம் இயக்கிய தளபதி, ராவணன் மற்றும் விஜய்யின் துப்பாக்கி, சூர்யாவின் அஞ்சான் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் அவர் தற்போது தன ட்விட்டர் பக்கத்தில் தான் ரஜினி படத்தில் இணையவுள்ளதாக அறிவித்து ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அதில்.... "தளபதி படத்துக்குப் பின்னர் ரஜினியுடன் இணைவது உற்சாகமாகவுள்ளது" என பதிவிட்டுள்ளார். மேலும் இப்பதிவை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் ரீ ட்வீட் செய்துள்ளார். 'பேட்ட' படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்கப்போவதாக சமீபத்தில் தகவல் வெளியான நிலையில், தற்போது இந்த ட்விட்டர் பதிவு மூலம் இந்த தகவல் உறுதியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் ரஜினி போலீசாக நடிக்கவுள்ளதாகவும் புதிய தகவல் கசிந்துள்ளது.