![prabhus](http://image.nakkheeran.in/cdn/farfuture/cnrP6KRRWLL58Q0XdEIxybAeklBbs52oKXC1RxKN-8U/1552046034/sites/default/files/inline-images/prabhas_0.jpg)
பாகுபலி என்னும் பிரமாண்ட படத்திற்கு பின்பு பிரபாஸ் நடிக்கும் படம் சாஹோ. பாகுபலி கொடுத்த பிரமாண்ட வெற்றிக்கும், பிரபலத்திற்கும் பின் இது ரிலீஸாக இருப்பதால் இந்தியா முழுவதும் நல்ல எதிர்பார்ப்பு இப்படத்திற்கு இருக்கிறது. பாலிவுட்டில் பிரபல நாயகியான ஷ்ரத்தா கபூர், இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கிறார். ‘ரன் ராஜா ரன்’ படத்தை இயக்கிய சுஜீத்தான் இந்த படத்தை இயக்குகிறார். இப்படமும் பெரும் பொருட்செலவில் எடுக்கப்படுகிறது. ஷங்ஜர் இஷான் லாய் ஆகியோர் படத்திற்கு இசை அமைக்கின்றனர். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார்.
கடந்த மார்ச் 3ஆம் தேதி இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ஷ்ரதா கபூரின் பிறந்தநாளை முன்னிட்டு, படக்குழு ஷேட்ஸ் ஆப் ஷாஹோ சாப்டர் 2 என்று வீடியோ ரிலீஸ் செய்தார்கள். இதற்கு முன்பு பிரபாஸ் பிறந்தநாளுக்கு வீடியோ ஒன்றை ரிலீஸ் செய்திருந்தது படக்குழு. தற்போது இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை பார் பிலிம்ஸ் ரூ 42 கோடிக்கு வாங்கியிருப்பதாக தெரிகிறது. மேலும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் வெளியிடப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பாகுபலி இரண்டாம் பாகத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின்னர் பிரபாஸுக்கு வெளியாக இருக்கும் முதல் படம் என்பதால் பலரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.