முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அவரது வாழ்க்கையை மையமாக கொண்டு படம் எடுக்க ஏ.எல் விஜய், ஏ. பிரியதர்ஷினி, பாரதிராஜா ஆகியோர் முயற்சி செய்வதாக தகவல் வெளியானது. தற்போது இந்த வரிசையில் கோலிவுட்டின் மற்றொரு முன்னணி இயக்குனரான கௌதம் வாசுதேவ் மேனனும் சேர்ந்துள்ளார்.
![jayalalitha](http://image.nakkheeran.in/cdn/farfuture/RkyKqCL8tjZUMdNunPfstrlLM1zRnae4dza0qcNnt8U/1553007646/sites/default/files/inline-images/jeyalalitha_0.jpg)
இவர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக எடுக்காமல், இணையத்தில் தொடராக எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணனும், எம்.ஜி.ஆராக மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமார் நடிக்க இருக்கிறார்கள் என்று கடந்த வருடம் ஆகஸ்ட் மாதமே சொல்லப்பட்டது.
இந்நிலையில், 30 பகுதிகள் கொண்ட இத்தொடரில் இந்திரஜித், அவருடைய பகுதியை நடித்து முடித்திருக்கிறார் என்று சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த தொடரின் தலைப்பு ‘குயின்’ என்று பெயரிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.